Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஞ்சித் நடிக்கும் பசுபதி மே/ பா ராசக்காபாளையம்

Webdunia
Webdunia
கே.செல்வபாரதி இயக்கத்தில் ரஞ்சித் நடிக்கும் பசுபதி மே/ பா ராசக்காபாளையம் காசை முழுங்கிய பசுபத ி

சிக்ரன் சினிமா என்ற புதிய பட நிறுவனம் மிகப ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் பசுபதி மே/பா ராசக்காபாளையம், இந்தப் படத்தில் ரஞ்சித் கதாநாயகனாக நடிக்கிறார். நினைத்தேன் வந்தாய், பிரியமானவளே, வசீகரா, ஹலோ, விவரமான ஆளு போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய கே.செல்வபாரதி பசுபதி மே/பா ராசக்காபாளையம் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்குகிறார்.

பசுபதி மே/பா ராசக்காபாளையம் படத்தின் பட்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறத ு.

வறுமை நிலையில் வாழ்ந்து வரும் அம்மாவிடம் என் கூட படிக்கிற பசங்களோட அம்மாவும் நிறைய நகை பட்டுப்புடவை எல்லாம் கட்டி நல்லா இருக்காங்க. நீ மட்டும் ஏம்மா இப்படி இருக்கே? என்று கேட்கிறான் சிறுவன் பசுபதி. மகனுக்கு தன் வறுமையை புரிய வைக்க வழி தெரியாமல், "கடவுள் அவங்களுக்கு எல்லாம் காசு மரத்தை கொடுத்திருக்காருப்பா" என கூறி சமாளித்தாள்.

இந்த நிலையில் பிரண்டுகளோடு ஏலந்தப் பழம் சாப்பிட்டுக் கொண்டிருந்த பசுபதி கொட்டையை முழுங்கிவிடுகிறான். அதைப் பார்த்த அவனது நண்பர்கள் "கொட்டையை முழுங்கிட்டே.. உன் வயித்தில எலந்தப்பழம் மரம் வளரும்" என்று சொல்ல, பசுபதி யோசிக்கிறான். எலந்தப் பழக் கொட்டையை முழுங்கினால், ஏலந்த மரம் முளைக்குமென்றால், நாம காசை முழுங்கினால், நம்ம வயத்தில காசு மரம் முளைக்குமே என முடிவு செய்த பசுபதி கையில் இருக்கும் ஐந்து காசு பத்து காசு என எல்லாவற்றையும் முழுங்கிவிடுகிறான்.

ஒவ்வொரு காசை முழுங்கும் போதும் அவன் கண்ணில் காசு மரம் பூத்து குலுங்குகிறது. அதிலிருந்து பணத்தை பறித்து அம்மாவுக்கு கொடுப்பது போல் கனவு காண்கிறான். ஒரு நாள் வயிற்றுவலி அதிகமாகி துடிக்கிறான். அம்மா பதறிப் போய் டாக்டரிடம் போகலாம்னு கூப்பிட, வேண்டாம்மா.. வயத்துல காசு மரம் முளைச்சிருக்கும்மா அதனாலதான் வயிறு வலிக்குது என்று கூறி, காசு முழுங்கிய விஷயத்தைக் கூறுகிறான். பசுபதி தன் மேல் வைத்திருக்கும் அன்பை அறந்த தாய் அவனை அப்படியே வாரி அணைத்துக் கொள்கிறான்.

இதில் பசுபதியாக சிறுவன் ராகுலும், அவனது அம்மாவாக அர்ச்சணா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்கள்.

பசுபதி மே/பா ராசக்காபாளையம் படத்தில் ரஞ்சித்துக்கு ஜோடியாக, கதாநாயகியாக சிந்துதுலானி நடிக்கிறார். மற்றொரு கதாநாயகியாக மேகா நாயர் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். மற்றும் விவேக், கஞ்சா கருப்பு, மனோபாலா, செல்லத்துரை, தியாகு, சுப்புராஜ், பரவை முனியம்மா, புதுமுகம் ராணி, வில்லனாக பாபூஸ் ஆகியோருடன் இயக்குநர் செல்வபாரதியின் மகன்களான ரோஹித், ராகுல் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு: தாஜ்கமல், இசை: தேவா, இதுவரை ஒன்றிரண்டு பாடல்களை எழுதி வந்த இயக்குநர் கே.செல்வபாரதி இந்தப் படத்தில் அனைத்துப் பாடல்களையும் எழுதுகிறார்.

கலை: வைரபாலன், நடனம்: பாலகுமர்-ரேவதி, சண்டைப் பயிற்சி: தளபதி தினேஷ், படத்தொகுப்பு: சாய்சுரேஷ், தயாரிப்பு நிர்வாகம்: ஆறுமுகம், தயாரிப்பு மேற்பார்வை:ஒய்.எஸ்.தனசேகரன், தயாரிப்பு: சிக்ரன் சினிமா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments