பாண்டியராஜனின் வாரிசு நடிக்கும் நாளைய பொழுதும் உன்னோடு!

Webdunia
பாண்டியராஜன் இரண்டாவது மகன் பிருத்வி கதாநாயகனாக நடிக்கும் படம் `நாளை பொழுதும் உன்னோட ு'. இதில் `கருவாப்பையா... கருவாப்பையா...' என்று `தூத்துக்குட ி' படத்தில் ஆட்டம் போட்ட கார்த்திகா கதாநாயகியாக நடிக்கிறார்.

பி.வாசுவிடம் உதவி இயக்குனராக இருந்த கே.மூர்த்தி கண்ணன் என்பவர் புதுமுக இயக்குனராக இப்படத்தில் அறிமுகமாகிறார். மாயவரத்தைச் சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர்.சுரேஷ் குமார ், பி.ஆர்.கே பிலிம்ஸ் பேனரில் முதன் முறையாக படத் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கிறார்.

சின்ன வயதிலிருந்து நட்பாக பழகும் இருவரை வயது வந்ததும் பிரித்து வைப்பதால் அது எப்படி காதலாக மாறுகிறது என்பதுதான் கதை.

Webdunia
இப்படத்தில் பாண்டியராஜனின் மூத்த மகன் பல்லவனும் மூன்றாவது மகன் பிரேமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். மாயவரம் பகுதியை ஒட்டி நவக்கிரகங்கள் உள்ள ஊர்களில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். அதன் தொடர்ச்சியாக தென்காச ி, சென்னை மற்றும் மலேஷியாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

பள்ளிப் பருவத்து காதலை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் இதுவரை சொல்லாத மாதிரி புது கோணத்தில் சொல்லியிருக்கிறாராம் இயக்குனர். இதில் பிரித்வ ி, கார்த்திகா தவிர... லிவிங்ஸ்டன ், வேணு அரவிந்த ், கௌர ி, கதா.க.திருமாவளவன ், கோவை குண ா, கீதா அப்புறம் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள இயக்குனர் டி.வி.சந்திரனும் நடிக்கிறார்கள்.

இசை - ஸ்ரீகாந்த் தேவ ா
ஒளிப்பதிவு - தினேஷ்ராஜ ்
எடிட்டிங் - செல்வராஜ ்
கலை - கிருஷ்ணன ்
ஸ்டண்ட் - கில்லி சேகர ்
நடனம் - ஸ்ரீதர ்
ஸ்டில்ஸ் - அருண் கே.ஜெயன ்
டிஸைனர் - சரவணன ்
பாடல்கள் - கபிலன ், யுகபாரத ி, கே.மூர்த்தி கண்ணன ்
தயாரிப்பு நிர்வாகம் - ராஜ ா
தயாரிப்பு மேற்பார்வை - ஜி.மோகன ்
மக்கள் தொடர்பு - வீ.கே.சுந்தர ்
தயாரிப்பு - பி.எஸ்.சுரேஸ்குமார்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிவகார்த்திகேயன் அளவுக்கு எங்களிடம் பணம் இல்லை.. நடிகர் ஆரி ஆதங்கம்..!

சூர்யாவின் கையில் உள்ள கைக்குழந்தை யார்? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம்..!

தாய் கிழவி' வசூல் வேட்டை: இரண்டாம் நாளில் அதிரடி முன்னேற்றம்!

மத்திய கிழக்கில் போர் பதற்றம்: துபாயில் சிக்கிய நடிகர் அஜித்துக்கு என்ன ஆச்சு? ரசிகர்கள் கவலை..!

குழந்தை பெற திருமணம் அவசியமில்லை.. கருமுட்டைகளை சேமித்து வைத்துள்ளேன்: பிரபல நடிகை

Show comments