Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறுபதிப்பாகும் நான் அவனில்லை!

Webdunia
பழைய படங்கள் பாடல்கள் எல்லாமே ரீ-மேக ், ரீ-மிக்ஸ ் என்ற பெயரில் மறுபடியும் வரத் தொடங்கியிருக்கிறது.

அந்த வரிசையில் கே.பாலசந்தரின் நான் அவனில்லை படத்தை மறுபடியும் எடுக்கப் போகிறார் இயக்குனர் செல்வா. ஒரு ஆசாமி பலவித தோற்றங்களில் போய் பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றுகிற கதை இது.

அந்தக் காலத்தில் ஜெமினிகணேசன் நடித்து பரபரப்பை ஏற்படுத்திய இந்த கேரக்டரில் "திருட்டுபயலே" ஜீவன் நடிக்க உள்ளார். முப்பத்தொரு வருடத்துக்கு முன்னால் வந்த படம் இப்போதைய காலமாற்றத்துக்கு ஏற்ப கலர் மாறப் போகிறது. ஸ்நேக ா, நமித ா, மாளவிக ா, ஜோதிர்மய ி, கீர்த்திசாவ்லா ஆகிய 5 பேரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கியமான கேரக்டரில் சந்தானம் நடிக்கிறார்.

படப்பிடிப்பு சென்ன ை, நாகர்கோயில ், கன்னியாகுமர ி, திருச்சூர ், திருவனந்தபுரம ், சாலக்குட ி, சிக்மகளூர ், இடுக்க ி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.

பாடல் காட்சிகளை மாலத்தீவ ு, செஷல்ஸ ், பிலிப்பைன்ஸ ், சுமத்ரா தீவுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். விஜய் ஆன்டனி இசையமைக்கிறார். யூ.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத..திரைக்கதை அமைத்து இயக்குகிறார் செல்வா.

நேமிசந்த் ஜபாக் நிறுவனம் சார்பில் வி.ஹிதேஷ் ஜபாக் தயாரிக்கிறார். கஜின ி, வல்லவன் படங்களின் விநியோகஸ்தரான இவர் தயாரிக்கும் முதல் படம் இது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments