Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருவிழா பாடல் காட்சி

Webdunia
எஸ்.ஆர்.எம். பிலிம் இன்டர்நேஷ்னல் சார்பில் எச்.ஜி. பிரமிளா கணேஷ் தயாரிக்கும் "பிறப்பு" படத்திற்காக பொள்ளாச்சியிலுள்ள சூலக்கல் என்ற கிராமத்தில் ஊர் திருவிழாவில் நடைபெறும் பாடல் காட்சி ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது.

" கடலைன்னா கடல ை
இது கரிசக்காட்டு கடல ை
இந்த விடலை எதையும் விடல ை
என்னை யாரும் இன்னும் தொடல..."

எனத் தொடங்கும் பாடலுக்கு நந்திதா நடனமா ட, அவருடன் கதாநாயகன் புதுமுகம் பிரப ா, கஞ்சா கருப்பு மற்றும் 50 நடனக் கலைஞர்களும் இணைந்து ஆடினர். இப்பாடல் காட்சியில் கரகாட்டம ், மயிலாட்டம ், ஒயிலாட்டம ், பொய்க்கால் குதிரை ஆட்டம் போன்ற கிராமிய நடனங்களும் இடம் பெற்றது. பொது மக்கள் திளராக வந்து கலந்து கொண்டனர். சிவசங்கர் நடன அமைப்பில் மூன்று கேமராக்கள் கொண்டு படமாக்கினார் ஷங்கி மகேந்திரா. இவர் இயக்குநர் பாலு மகேந்திராவின் மகன்.

பரத்வாஜ் இசை அமைக்கிறார். கதாநாயகியாக "தூத்துக்குடி" பட நாயகி கார்த்திகா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக கேரள வரவு புதுமுகம் மயூகா நடிக்கிறார் மற்றும் பிதாமகன் மகாதேவன ், சரண்ய ா, சுலக்ஷன ா, சண்முகராஜ ், கஞ்சாகருப்ப ு, ஜார்ஜ ், மீண்டும் மீண்டும் சிரிப்பு புகழ் ஷோபனா ஆகியோர் நடிக்கின்றனர்.

கத ை, திரைக்கத ை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் எல்.வி. இளங்கோவன ், இவர் இயக்குநர் கே. விஜயன ், நாசர ், பாலா ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

சென்னையில் செம்பொழில் கிராமத்துத் திருவிழாவில் கலந்துகொண்ட, நடிகர் கார்த்தி!!

ரஷ்ய சினிமாவின் பாரம்பரியம் மிக்க MOSFILM ஸ்டுடியோவின் 100-வது ஆண்டு விழாவை வெற்றிகரமாக கொண்டாடியது!.

சசிகுமார் - சிம்ரன் முதன்முறையாக இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு அக்டோபரில் தொடக்கம்!

மாடர்ன் ட்ர்ஸ்ஸில் துஷாராவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

Show comments