Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"கல்லூரி காதல்" இது வித்தியாசமானது

Webdunia
கல்லூரியை மையமாக வைத்து தமிழில் நிறைய படங்கள் வந்துவிட்டன. அந்த வரிசையில் "கல்லூரி காதல்" என்ற படமும் வந்திருக்கிறது. ஆனால் இது மற்ற படங்களை விட மிகவும் வித்தியாசமானது என்கின்றனர் படக்குழுவினர்.

படத்தின் பெயரில் தான் காதல் இருக்கிறதே தவிர இதன் கதை முழுக்க முழுக்க வித்தியாசமானது. காவல் துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஏற்படும் போராட்டத்தை வைத்து கதை பின்னப்பட்டிருக்கிறது. அன்ப ு, காதல் கிசு கிசு , கலிங்கா ஆகிய படங்களில் நடித்த பால ா, இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். பிரபல நடிகை ஜெயபாரதியின் தங்கை மகனான முன்னா படத்தின் இன்னொரு கதாநாயகனாக நடிக்கிறார். காமெடி வேடத்தில் கருணாஸ ் எம்.எஸ ். பாஸ்கர ், காதல் சுகுமார ், பாலேந்திரன ், சிங்கமுத்து ஆகியோரும் நடிக்கின்றனர். இவர்களுடன் லிவிங்ஸ்டன் முக்கியமான
கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஜீவன் தாமஸ ். இவர் ஏ.ஆர்.ரகுமானிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். தருண் ஒளிப்பதிவு செய்கிறார். தேவ சேனாதிபதி என்பவர் வசனம் எழுதுகிறார். படத்தின் கத ை, திரைக்கத ை, இயக்கம் மனோரஞ்சன். இவர் பார்த்திபனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். எஸ ். ஆர்.பிலிம்ஸ ் சார்பில் படத்தை தயாரிப்பது எஸ ். ராதா. வருகிற 23ம் தேதி கோவையில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்ட ி, குன்னூர ், கோத்தகிர ி, நாகர்கோவில ், கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் நடக்க இருக்கிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அழகூரில் பூத்தவளே… நஸ்ரியாவின் க்யூட்டெஸ்ட் போட்டோ கலெக்‌ஷன்!

ஆரோக்யமற்ற உணவுப்பொருளை விளம்பரப்படுத்தியது தவறுதான்… சமந்தா பேச்சு!

சுந்தர் சியோடு மோதும் அனுராக் காஷ்யப்… எப்படி இருக்கு ‘ஒன் டு ஒன்’ டிரைலர்!

விஷால், ஜெயம் ரவி விலகல்… விஜய் சேதுபதி பாண்டிராஜ் காம்பினேஷன் உருவான பின்னணி என்ன?

அபூர்வ சகோதரர்கள் குள்ளமாக நடித்தது எப்படி?... ரகசியத்தை வெளியிடப் போகும் கமல்ஹாசன்!

Show comments