நம்பர் ஒன்னில் உடன்பாடில்லை – சினேகா!

Webdunia
webdunia photoWD
பத்த வைத்த மத்தாப்பாக தீபாவளி பிரகாசத்துடன் இருக்கிறார் புன்னகை இளவரசி சினேகா. ச ி‌ ரிப்பை சீசாவில் பிடித்தால் பளீரென்று இன்னொரு பவுர்ணமி பண்ணலாம். அ வ‌ ரின் உற்சாக பேட்டியிலிருந்து...

காக்கி உடையணிந்து நடிக்கப் போகிறீர்களாமே?

ஆமாம். விஜயசாந்தி நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தை ‌ர ீ- மேக் செய்கிறார்கள். அதில் விஜயசாந்தி நடித்த போலீஸ் ஆபிஸர் வேடத்தில் நடிக்கிறேன்.

இந்தப் படத்துக்காக ஸ்பெஷல் ட்ரெயினி‌‌ங் எடுத்துக் கொள்வது உண்மையா?

ஆ‌ க்சன் படம் என்பதால் சண்டைப் பயிற்சி எடுத்துக் கொள்கிறேன். வைஜெயந்தி ஐபிஎஸ ்- ன் ‌‌ர ீ- மேக் என்றாலும் இன்றைய சூழலுக்கு ஏற்ப கதையில் நிறைய மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கிறது. இந்தப் படம் என்னுடைய க ோ p ய‌ ரில் முக்கியமான மாற்றமாக இருக்கும்.

இப்போது எத்தனை ப ட‌ ங்களில் நடித்துக் கொண்டிருக்கிறீர்கள்?

போன வருடம் எனக்கு நன்றாக அமைந்தது போலவே இந்த வருடமும் சிறப்பாக இருக்கிறது. ஒன்பது ப ட‌ ங்கள் கைவசம் இருக்கின்றன.

தமிழில் தற்போது உ‌ ங்கள் இடம் என்ன?

இந்த நம்பர் ஒன், நம்பர் டூ மாத ி‌ ரியான கணக்குகளில் எனக்கு நம்பிக்கை இல்லை.

ஏன் அப்படி?

அதிகபடியான கிளாமர், அதிகபடியான சம்பளம் இதை வைத்துதான் நம்பர் ஒன், டூ எல்லாம் கணக்கு போடுகிறார்கள். அந்த கணக்கு எனக்கு பிடிக்காது.

ஒரு பாடலுக்கு ஆடுவீர்களா?

சம்பளம் அதிகம் கிடைப்பதால் சிலர் ஒரு பாடலுக்கு ஆடுகிறார்கள். ஆனால், நிச்சயமாக நான் ஒற்றை குத்துப் பாடலுக்கு ஆடமாட்டேன். அதில் எனக்கு உடன்பாடில்லை.

பிறந்தநாளை எப்படி கொண்டாடினீர்கள்?

காளிகாம்பாள் கோயிலுக்குப் போய் சாமி கும்பிட்டேன்.

ஸ்பெஷல் வேண்டுதல் ஏதாவது?

இந்த வருடமாவது தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ள ப ட‌ ங்கள் அமைய வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அம்பாள் அருள்ப ு‌ ரிவார் என்று நம்புகிறேன்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிக்பாஸ் ஆண் போட்டியாளரை மகனாக தத்தெடுக்க விரும்பும் சுசித்ரா.. காரணம் இதுதான்..!

தொடங்கிய 7 மாதத்தில் முடிவடையும் விஜய் டிவி தொடர்.. இதற்கு பதில் புதிய சீரியல் எது?

திரையரங்குகளில் ரிலீசாகும் அஜித்தின் ஆவணப்படம்.. ரிலீஸ் தேதி இதுவா?

Show comments