ஸ்ரீ ஸ்ரீநிவாஸ் ரெட்டி 'ஆலயம்' படத்தின ் ஒளிப்பதிவாளர். காசி, லடாக் என்று முக்கியமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்திவிட்டு வந்த அவரிடம் அந்த இடங்களின் தனித்தன்மை குறித்து உரையாடினோம்.
காசியில் படப்பிடிப்பை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
படத்தோட கதையே காசி பேக்ட்ராப்லதான் நடக்குது. காச அபூர்வமான நகரம். ஒவ்வொரு பகுதிக்கும் அதோட முழுமையான அழகு, தனித்தன்மை வெளிப்படுற காலம்னு ஒண்ணு இருக்கு. காசிக்கு அது பிப்ரவரி, மார்ச். காசியில அது வின்டர் சீஸன். ஊரெல்லாம் புகை மாதிரி பனி படர்ந்திருக்கும். இந்த காலகட்டத்துலதான் ஆஸ்திரேலியாவிலிருந்து கடல் சீகல்ஸ் காசிக்கு வரும். வெண்மையா கங்கையின் மேற்பரப்பை சீகல்ஸ் மூடியிருப்பதை பார்க்கிறதே பரவசமான அனுபவம்.
காசியின் சூரிய உதயமும் புகழ்பெற்றது இல்லையா?
கங்கையோட ஒரு கரையில் காசி நகரம். மறு கரையில் கட்டடங்களோ, ஊரோ இல்லாத முழுமையான வெறுமை. இதுல சூரியன் மேலெழுந்து வர்றது அவ்வளவு அற்புதமா இருக்கும். காசி சன்ரைஸ் மாதிரியான அனுபவத்தை உலகத்தில் வேறு எங்கும் நீங்க பெற முடியாது.
லடாக்கில் எடுத்த பாடல் காட்சி பற்றிச் சொல்லுங்கள்...
webdunia photo
WD
லடாக்கில் வருஷத்தோட ஆரம்ப மாதங்களில் பனி முழுமையா மூடியிருக்கும். எதுவுமே தெரியாது. ஜூன், ஜூலையில் மழை பெய்த பிறகு பனி கரைஞ்சு, மலைகள் அதனோட ஒரிஜினல் கலரில் தெரிய ஆரம்பிக்கும். அந்த சமயத்தில்தான் நாங்க பாடல் காட்சியை எடுத்தோம்.
சிம்லாவுக்கு அடுத்து ரோத்தான்ல இருந்து சீனா பார்டருக்கு போற வழியில் அந்தப் பாடல் காட்சியை படமாக்கினோம். கடல் மட்டத்திலிருந்து பதினைந்தாயிரம் அடி உயரம். இரண்டு டிகிரி குளிர். ஸ்பாட்டுக்கு வந்த பிறகு திரும்பிப் போக முடியாது. மூணு நாள் அங்கேயே டெண்ட் அடிச்சு தங்கி பாடல் காட்சியை எடுத்தோம்.
வெளிநாடு போனால் இத்தனை கஷ்டப்படாமலே இதே மாதிரியான லொகேஷனில் படப்பிடிப்பை நடத்தியிருக்கலாமே?
நம்ம நாட்லயும் அதே மாதிரியான இடங்கள் இருக்குனு சொல்வதற்காகத்தானே இத்தனை கஷ்டமும். அதனால் வெளிநாடு என்ற பேச்சுக்கே இடமில்லை!