பரத்தும் ஆக்ஷன் ஹீரோவாகிவிட்டார். பழனி படத்தின் மூலம் ஒரு முழுமையான ஆக்ஷனில் முத்திரை பதித்துள்ளார். அந்தப் பூரிப்பிலிருக்கும் பரத்துடன் ஒரு சந்திப்பு.
நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடித்து வந்த நீங்கள் திடீரென்று ஆக்ஷன் ஹீரோவாகியிருப்பது ஏன்?
" எனக்குள் இருந்த நீண்டநாள் கனவு ஆக்ஷன் ஹீரோ ஆக வேண்டும் என்பதுதான். அதற்கு இப்போதுதான் நேரம் அமைந்தது. அதற்காக தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பரம் சாருக்கும் இயக்குநர் பேரரசு சாருக்கும் நன்றி",
ஆக்ஷனுக்கு மாறும்போது தயக்கமோ பயமோ இல்லையா?
webdunia photo
PTI
" அந்தப் பயமும் பீதியும் எனக்கு மட்டுமே தெரியும். ஒவ்வொரு நாளும் பயந்துடனேதான் போனது. பல நாள் தூக்கமில்லை. நடிக்கும் போது கூட பேரரசு சாரிடம் கேட்டேன். சர ி ¨ப்பட்டு வருமா சார்.. நீங்கள் ஏற்கனவே விஜய் சார், அஜீத் சார், விஜயகாந்த் சார் என்று பெரிய மாஸ் ஹீரோக்களை வைத்து ஆக்ஷன் படம் செய்து இருக்கிறீர்கள். அந்த வரிசையில் வளர்ந்து வரும் நான் சரிப்பட்டு வருவேனா என்று கூடக் கேட்டேன். என் ஹீரோவை எப்படிக்கொண்டு வந்து ஜெயிக்க வைக்கிறது என்று எனக்குத் தெரியும் என்றார். அதன்பிறகுதான் எனக்கே நம்பிக்கை வந்தது. அவர் சொல்கிறபடியெல்லாம் கேட்டேன். அவ்வளவுதான் நான் செய்தது. வளர்ந்து வரும் என்னை வைத்து இவ்வளவு பெரிய படத்தைக் கொடுத்திருக்கிறது பேரரசு சாரின் திறமை. படத்தில் ரிசல்ட் நன்றாக இருக்கிறது என்று தெரிந்த பிறகுதான் எனக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. படம் எப்படி வருமோ... படம் எப்படி போகுமோ என்று நான் பட்ட பாடு எனக்கு மட்டும்தான் தெரியும். இப்படிப்பட்ட கஷ்டம் நடிப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்"
ஆக்ஷன் ஹீரோவான பின் கதை முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடிக்க மாட்டீர்களா?
" கமர்ஷியல் படங்களில் நடித்தாலும் நல்ல கதையம்சமுள்ள படங்களையும் விடமாட்டேன். நான் என்றுமே ஒரு தயாரிப்பாளரின் நடிகராக வரவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். ரஜினி சார் விஜய் சார் போல தயாரிப்பாளர்கள் சிரித்த முகத்துடன் என்னிடம் வரவேண்டும். இதுதான் என் ஆசை".
ஆக்ஷன் ஹீரோவாக உரிய காலம் வந்துவிட்டதா உங்களுக்கு?
" காதல், வெயில், கூடல் நகர் படங்களில் என்னை ஒருவிதமாகப் பார்த்தார்கள். என்னை வேறுவிதமாக வெளிப்படுத்த வாய்ப்பு வரவில்லை. பட்டியல் படத்தில் கூட ஆக்ஷன் இருந்தது. மற்ற சில படங்களிலும் இருந்தது. ஆனால் பழனி மாதிரி ஆக்ஷன் பின்னணி இல்லை. பாய்ஸ் படத்திற்குப் பின் 15 படம் முடித்துவிட்டேன். நாலரை வருஷம் ஓடிவிட்டது. இப்போதுதான் ஆக்ஷனுக்கு வந்திருக்கிறேன். இதுதான் சரியான நேரம். இந்த விஷயத்தில் நான் அவசரப்படவில்லை என்றே நினைக்கிறேன்.
2008- ன் திட்டம் என்ன?
webdunia photo
WD
" கடந்து போன 2007 எனக்கு அவ்வளவு சிறப்பாக இல்லை. கூடல் நகர் என்று ஒரே ஒரு படம்தான் வந்தது. அது அவ்வளவு பெரிதாகப் போகவில்லை. 2008 ஆரம்பத்திலேயே பழனி வந்திருக்கிறது. எனக்கு ஆக்ஷன் ஹீரோ ப்ரமோஷனும் கொடுத்திருக்கிறது. அடுத்து நேபாளி வர இருக்கிறது. அதில் பல வித்தியாசங்களைப் பார்க்கலாம்".
நேபாளியில் அப்படியென்ன வித்தியாசம்?
" நான் இதுவரை இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறேன். இதில் மூன்று வேடங்களில் நடித்திருக்கிறேன். படம் முடிந்துவிட்டது. வெளியிடத் தயாராக இருக்கிறது. இப்போது பழனி வந்திருப்பதால் மார்ச் மாதம் நேபாளி வர இருக்கிறது. நேபாளியில் பெர்பாமன்ஸ் மட்டுமல், கதையிலும் சில எக்ஸ்பரிமண்ட்ஸ் செய்திருக்கிறார் டைரக்டர். அது பேசப்படும். படம் வரட்டும் பாருங்கள்".
மீண்டும் திருமுருகனுடன் இணைந்திருக்கிறீர்களோ?
ஆனால் 'முனியாண்டி' படம் வேறு மாதிரி இருக்கும். ஆக்ஷனும் காமடியும் கலந்த கலவையாக இருக்கும் முழுமையான பொழுதுபோக்குப் படமாக இருக்கும். பேரரசு சாருடன் மீண்டும் இணைய இருக்கிறேன். ஹரி சார் சுரேஷ் கிருஷ்ணா சார் வாய்ப்புகளும் இருக்கின்றன. இந்த 2008 நல்ல பிரகாசமாக இருக்குமென்றே நம்புகிறேன்".
தெலுங்கில் நடிப்பீர்களா?
" தெலுங்கில் என் படங்கள் டப்பிங்கில் நல்ல விலைக்குப் போகிறது. தமிழில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன். அதனால் வந்த சில தெலுங்குப் பட வாய்ப்புகளைக் கூட விட்டுவிட்டேன்".
உங்களுடன் நடிக்கும் கதாநாயகிகளை சிபாரிசு செய்துண்டா?
" நிச்சயம் ஹீரோக்களிடம் சஜஷன் கேட்பது சகஜம். என்னிடமும் கேட்பார்கள். என் கருத்தைச் சொல்வேன். நாம் சஜஷன் தான் சொல்ல முடியும். டிஸிஸன் எடுப்பது டைரக்டர்தான்".
புதிய தோற்றத்தில் நடிப்பீர்களா?
" கெட் அப் மாற்றிக்கொண்டு நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. எனக்கு உடன்பாடும் இல்லை".
சராசரி ஹீரோ ஆக்ஷனில் இறங்கிவிட்டதால் இனி உங்கள் சம்பளத்தை இருமடங்காக உயர்த்திக் கொள்வீர்களா?
" எனக்கென்ன பிஸினஸ் ஆகும் என்று எனக்குத் தெரியும். சம்பளத்தை நிச்சயம் உயர்த்துவேன். அதைப் படிப்படியாகவே செய்வேன். எனக்கென்ன பிஸினஸ் என்று என்னிடம் வரும் தயாரிப்பாளர்களுக்கும் தெரியும். நான் சம்பளத்தை நல்ல கதைக்காக விட்டுத் தருவேன். அதனால் சம்பள விஷயத்தில் நான் நியாயமான கொள்கையை கடைபிடிக்க விரும்புகிறேன்".