அண்மையில் வெளியாகி வெற்றியை நோக்கிப் பயணம் செய்து கொண்டிருக்கும் படம் ஒன்பது ரூபாய் நோட்டு. அதில் மாதவர் படையாட்சியாக வாழ்ந்து படம் பார்த்தவர் இதயங்களில் பளிச்சென ஒட்டிக் கொண்டிருப்பவர் சத்யராஜ்.
அந்த நடிப்புக்காக பாராட்டுக்களைக் குவித்து வரும் சத்யராஜூடன் ஒரு சந்திப்பு.
ஒன்பது ரூபாய் நோட்டு ப அனுபவம் பற்றி?
நானும் சினிமாவுக்கு வந்து சில்வர் ஜூப்ளி கொண்டாடியாச்சு. எத்தனையோ படங்கள் நடிச்சாச்சு. ஆனாலும் இந்த பெரியாரையும், ஒன்பது ரூபாய் நோட்டையும் என்னால் மறக்க முடியாது. பெரியார் அனுபவம் எப்படி பெரிய அனுபவமாக இருந்தது என்பதை இது நாள் வரை சொல்லிக் கொண்டு இருந்தேன். அதைப் போல இப்போது ஒன்பது ரூபாய் நோட்டு பட அனுபவங்களை சொல்லிக்கிட்டு இருக்கேன். இந்தப் படத்தில் தங்கர்பச்சான் சொன்னதையெல்லாம் கேட்டேன். என்னை முழுசா அவர்கிட்டே ஒப்படைச்சிட்டேன். அதனால்தான் சத்யராஜ்ங்கிற நடிகன் காணாமல் போனதை உணர முடிஞ்சுது. ரொம்ப சீரியஸானவர் தங்கர். பொறுமையான நிதானமாக ரசிச்சு ரசிச்சு செதுத்தினார்.
இப்படிப்பட்ட கலைஞனும் தமிழ் சினிமாவுல இருக்கிறதுக்காக நாம பெருமைப்படணும். லொக்கேஷன் கூட ஒரு கேரக்டர் மாதிரி வரும். நாங்க போன எல்லா இடத்திலேயேயும் மக்கள் கூட்டம். ஆனால் தங்கர் அதையெல்லாம் பற்றி கவலைப்படாம தன் வேலையை பாதிக்காத அளவுக்கு நிதானமாக படத்தை காட்சிகளை எடுத்தார்.
உங்களால் எப்படி மாதவராக வாழ்ந்து காட்ட முடிந்தது?
அவர் சொன்ன கதை அப்படி. அவர் இந்தக் கதையை நாவலா எழுதியிருந்தார். அதைப் படிச்சப்போ அந்த கேரக்டர் மனசுக்குள் ஆழமா அழுத்தமா உட்கார்ந்திருச்சு. அதனால் நான் அதக்கு ட்யூன் ஆயிட்டேன். அப்புறம் தங்கர் வேலை வாங்கிய விதம் அப்படி. நான் படம் ஆரம்பிக்கும்போதே சொல்லிட்டேன். என்னை இன்றைக்கு புதுசா வந்து நடிக்க வர்றவங்ககிட்டே எப்படி வேலை வாங்குவீங்களோ எப்படி நடத்துவீங்களோ அப்படி நடத்துங்க. நல்லா வேலை வாங்குங்க. படத்துக்கு எந்த ஒத்துழைப்பும் தரத் தயார்னு சொல்லிட்டேன். அப்படியே சொந்நதையெல்லாம் கேட்டு நடிச்சேன். படம் நல்லா வரும்னு நம்பிக்கை இருந்திச்சு. ஆனால் இந்த அளவுக்கு வரும்னு படம் பார்த்துதான் அசந்தேன்.
படம் உங்களுக்குள் ஏற்படுத்தி இருக்கும் பாதிப்பு என்ன?
பெரியார் படத்துக்குப் பிறகே எனக்குள் சில முடிவுகள் வந்திச்சு. இனி கேரக்டர் பண்றப்போ முன்ன மாதிரி இல்லாமல் நல்லா கவனமாக இருக்கணும். ஏதோ தானோ வேஷங்களெல்லாம் இனி வேண்டாம். பெரியாரை சுமந்த உடம்பு இது. மனசு இது. அதுக்கு ஒரு மரியாதை கொடுக்கணும்னு தோணிச்சு. அதை முடிஞ்சவரை கொடுக்கணும்னு தோணிச்சு. அதை முடிஞ்சவரை நடைமுறைப்படுத்தவும் ஆரம்பிச்சுட்டேன்.
webdunia photo
WD
இனி லொள்ளு ஜொள்ளு சமாச்சாரமுள்ள விஷயங்களை படங்களில் குறைச்சுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். அந்த வகையில் இப்ப பார்த்துதான் படம் பண்றேன். கண்ணா மூச்சி ஏனடா கூட ஆரோக்கியமான நாகரீகமான படம். தங்கம் கூட ரசிக்கும்படி இருக்கும். முகம் சுளிக்கும்படி இருக்காதுன்னு நம்பலாம்.
170 படங்களைத் தாண்டி விட்டீர்கள். சினிமாவில் கற்றுக் கொண்ட படிப்பினை என்ன?
ஒண்ணா ரெண்டா எக்கச் சக்கமான படிப்பினைகள். பாடங்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு அனுபவம். இன்னமும் பாடம் படிச்சிக்கிட்டுதான் இருக்கேன். இவ்வளவுதான் சினிமான்னு நின்னுட முடியாது. சினிமாவோ என்னோட பார்வையும் இப்போ மாறியிருக்கு. அதுக்குக் காரணம் நான் சந்திச்ச மனிதர்கள். சினிமாவில் தோன்றுவோமா என்ற எண்ணிய காலம் போய் கமல் மாதிரி ஒரு படம் பண்ணினால் நல்லா இருக்கும் என்று தோன்றும் அளவிற்கு எண்ணங்கள் விரிந்துள்ளது.
உங்களை எப்போது நம்ப ஆரம்பித்.திர்கள்?
நான் முன்னாடி படங்களில் எம்ஜிஆர் பாணியில் பாட்டு, சண்டை நடிப்புன்னு பண்ணிட்டு இருந்தேன். அடிப்படையில் நான் எம்ஜிஆர் ரசிகனா இருந்ததால அதற்கு சந்தோஷப்பட்டேன். என்னோட ரசிகர் ஒருவர் போன் செய்து உங்களுக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கும்போது இன்னொருவர் ஸ்டைல் உங்களுக்கு எதுக்கு என்று எடுத்துக் கூறினார். நம்மை நாமே நம்பணும்னு தோணிச்சு. பிறகு மெல்ல மெல்ல என்னை மாத்திக்கிட்டேன். இன்றைக்கு ஒன்பது ரூபாய் நோட்டு அளவுக்கு வந்து நிற்குது.