Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலில் ரசிகன் பிறகுதான் நடிகன் - ஜீவன்

Webdunia
சனி, 27 அக்டோபர் 2007 (15:22 IST)
கதாநாயகனும் இல்லாமல் வில்லனும் இல்லாமல் கதையின் நாயகனாக நடித்து வருபவர் ஜீவன். தனக்கென புதுவழியைக் கண்டுபிடித்து 'தன்வழி தனி வழி'யென்று பயணம் செய்து வருகிறார்.

மோகன் ஸ்டூடியோவில் இரவு நேரத்தில் `மச்சக்காரன்' படப்பிடிப்பில் வெள்ளை உடையில் காம்னாவுடன் நெருக்கமாக, இறுக்கமாக இணைந்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தவரை இடைவேளையின் போது தொந்தரவு செய்து பேசியபோது...

வழக்கமான கதாநாயகனாக நடிக்காமல் ஒரு மாதிரியான நெகடிவ் நாயகனாக வருவது ஏன்?

webdunia photoWD
பொதுவா நல்லவனா நடிக்க - காதல், வாழ்க்கை இதுல எல்லாம் வெற்றிபெற நிறைய பேர் இருக்காங்க. ஆனால் சமுதாயத்தில் எல்லோருமே நம்ம சினிமா ஹீரோக்கள் மாதிரி இருக்கிறதில்லை. அதே சமயம் சினிமாவில் வர்ற வில்லன்கள் மாதிரி மோசமானவங்களாகவும் இருப்பதில்லை.

பல பலவீனங்கள் உள்ள, ரகசிய கோபம் கொண்ட, தாழ்வு மனப்பான்மையுள்ள மனிதர்கள் நிறைய இருக்காங்க. அப்படிப்பட்ட பலவீனமான மனிதர்களோட கேரக்டர்ஸ் எனக்கு கிடைச்சுட்டு இருக்கு. பலரும் செய்யத் தயங்கும் ரோல்கள் அவை. அதுல எனக்கு வெற்றியும் கிடைச்சிருக்கு. கதை, கேரக்டர்தான் பார்க்கிறேன். இதில் பாசிட்டிவ், நெகடிவ் பார்க்கிறதில்லை.

ஆனால் பொதுவாக ஆக்‌ஷன் ஹீரோக்களுக்குத்தானே மதிப்பு இருக்கிறது?

அப்படிச் சொல்ல முடியாது. படம் முழுக்க வந்து, உப்பு சப்பில்லாத கதைகளில் நடித்து நாலு பாட்டு, நாலு ஃபைட்டுனு நடிக்கிறத இப்ப யாரும் ரசிக்கறதில்லை. காலம் மாறி போச்சு. நான் வெளியூர்களில் சந்திக்கிற ரசிகர்கள், உங்க வழி தனி வழி அதிலேயே போங்கன்னு சொல்றாங்க. என் நடிப்பை ரசிக்கவும் செய்யறாங்க. என்னை நெகடிவா பார்க்கிறதில்ல. அப்படிப்பட்ட கேரக்டர்ல யாராவது நடிச்சுத்தானே ஆகணும். என்னை பொறுத்தவரை நான் நடிக்கும் படங்களில் நான் தான் ஹீரோ. ஆனால் ஹீரோவின் தன்மைதான் வேறு.

இந்த ரூட்டில் போவது உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?

webdunia photoWD
சினிமாவில் ஆடியன்ஸ்தான் முக்கியம். அவங்க வரவேற்பு கிடைக்கிறதுக்குத் தான் இவ்வளவு பாடுபடறாங்க. என்னைப் பொறுத்தவரை என் நடிப்புக்கு வரவேற்பு கொடுத்து அங்கீகாரம் கிடைச்சிட்டதா நினைக்கிறேன்.

நானும் பத்தோட பதினொண்ணா வந்து போயிருந்தால் இது கிடைச்சிருக்காது. கிடைக்கிறதை சந்தோஷமா ஏத்துக்கணும். இதுதான் என் பாலிஸி.

உங்கள் படங்களின் கதைகள் இளைஞர்களைக் குறிவைத்து எடுக்கப்படுகின்றனவா?

இளைஞர்களுக்கு மட்டும்தான்னு சொல்லிட முடியாது. பெரியவங்களுக்கும் அதுல கருத்து சொல்லப்படுகிறதே? எனது எல்லாப் படத்திலேயும் எல்லோருக்கும் மெசேஜ் இருக்கு.

' மச்சக்காரன்' தலைப்பே கவர்ச்சி ரகமாக உள்ளதே?

படத் தலைப்புக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அதெல்லாம் டைரக்டர்கள் முடிவு செய்யறது. தங்களின் கதைக்கு எந்த தலைப்பு சரியா இருக்குமோ அதனை வைக்கிறார்கள். மச்சக்காரன் ஒரு யதார்த்தமான ஆக்‌ஷன் கதையைக் கொண்ட படம்.

எப்படிப்பட்ட வித்தியாசமான முயற்சியில் இறங்க விருப்பம்?

கதைகளை நல்ல மாதிரியா செலக்ட் பண்ணி நடிக்கவே ஆசை. கதை ரிபீட் ஆகாம இருக்கணும். `பயணிகள் கவனத்திற்கு'-ன்னு ஒருபடம் நடிக்கிறேன். இந்தக் கதை ரயிலில் பிரயாணம் பண்ணுவது. ரயிலில் போகிறவங்க வாழ்க்கையை அழகா பதிவு ப்ண்ணக்கூடிய வித்தியாசமான படம்.

கதையை எப்படித் தேர்வு செய்கிறீர்கள்?

ஒருவரிக் கதையைக் கேட்பதில்லை. முழுக் கதையையும், முழுப் படம் ஓடுற அளவுக்கு கேட்பேன். இதற்கு நேரமானாலும் பரவாயில்லை. ஒரு நடிகனா இல்லாம, ரசிகனா கதையை கேட்பேன். ஒரே நேரத்தில் ஒரே சாயலில் கதை கொண்ட படங்கள் வந்துட்டா சரியா இருக்குமா? அதற்காகவே நான் அளவோடு கமிட் ஆகிறேன்.

தற்போது கைவசம் உள்ள படங்கள்?

webdunia photoWD
' மச்சக்காரன்' தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. அதற்கான இறுதிக்கட்ட வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. அடுத்ததாக 'பயணிகள் கவனத்திற்கு'. விஜயகுமார் என்பவர் டைரக்ட் செய்கிறார். என்னைப் பொறுத்தவரை நாம் இப்போ எப்படி பொழுதைக் கழிக்கிறோம் என்பது தான்.

இப்போ நடிச்சுக்கிட்டு இருக்கற படங்களைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பேன். நாளைய படங்கள் பற்றி அப்புறம்தான் யோசிப்பேன் என்று கூறியபடியே விடை பெற்றுக் கொள்கிறார் ஜீவன். அவரது பேச்சிலும் ஜீவனை காணமுடிகிறது.

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?