Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மச்சக்காரனும் இதயத்திருடியும் - இயக்குனர் தமிழ்வாணன்

Webdunia
வெள்ளி, 19 அக்டோபர் 2007 (13:03 IST)
மோகன் ஸ்டூடியோ! 'மச்சக்காரன்' படப்பிடிப்பு. ஆகாயத்தை அரங்கிற்குள் நிர்மாணித்து இருந்தார் கலை இயக்குனர் ரெமியன். நீல நிற விண்வெளியில்... தரை மீது இலை உதிர்த்த மரங்கள்... காய்ந்த சருகாய் புல்வெளிகள்... தொலைவில் பச்சைப் பரப்பு. இப்படியொரு பின்னணியில் ஜீவனும் - காம்னாவும் கட்டிப்பிடித்து பாடல்காட்சியில் நடித்துக் கொண்டிருக்க - இயக்குனர் தமிழ்வாணனுடன் உரையாடினோம்.

அது என்ன மச்சக்காரன்? படத்தில் ஜீவன் பெண்களை வசியப்படுத்தும் வாலிபனா?

பொதுவா மச்சம்னா அதிர்ஷ்டம்னுதான் அர்த்தம். ஒரு பைக் வாங்கிட்டா அவனுக்கென்னப்பா மச்சம்பாங்க. புது வீடு வாங்கிட்டா மச்சம்னு சொல்வாங்க. இப்படிச் சொல்லும்போது மச்சம்னா அதிர்ஷ்டம்னுதானே அர்த்தம் வருது. ஆனா மச்சக்காரன்னா பெண்கள் விஷயத்தில் சுலபமா கவர்றவன் - வசப்படுத்துறவன்னு தவறான கருத்து பரவலா இருக்கு. என் ஹீரோ விக்கி ரொம்ப நல்லவன். ஆனா சூழ்நிலையால அவனை மற்றவங்க தப்பா பார்க்கிறாங்க. படம் பார்க்கிற ஆடியன்ஸுக்குத் தெரியும் அவன் நல்லவன்னு. ஆனா கூட இருக்கிற கேரக்டர்ஸுக்குத் தெரியாது. அப்படிப்பட்டவன் நல்லது செஞ்சாலும் மத்தவங்க தப்பா பார்க்கிறாங்க. அதனால அவனுக்குப் பிரச்சினை. தவறு செய்யாமலேயே பழி அவன் மேல வரும்.

அப்புறம் எப்படி மச்சக்காரன் ஆகிறான்?

இப்படி எல்லா வகையிலும் துரதிர்ஷ்டசாலியா இருக்கும் அவன் மேல ஒரு பழி வரும். அவன் நிரபராதின்னு தெரியும். இருந்தாலும் வருந்துகிறான். மன்னிப்பு கேட்கிறான். தப்பு எதுவும் செய்யாம ஏன் மன்னிப்பு கேட்கணும்னு ஒரு குரல் வரும். அதுதான் நாயகி ஷிவானி. அடடா... நம்மையும் ஒரு ஜீவன் புரிஞ்சிருக்கேன்னு சந்தோஷப்படுவான். அவளைச் சந்திச்ச பின்னாடி மனசு நெருங்கி காதல் வருது. அவளை அடைந்தபின் மச்சக்காரன் ஆகிறான். பல நல்லது நடக்கிறது.

' கள்வனின் காதலி' படத்திலேயே இயக்குனர் தமிழ்வாணனின் கவர்ச்சிக்கொடி பறந்தது... இதிலும் பறக்குமா?

காம்னாவை இதில் ரொம்பவே ஹோம்லியா காட்டியிருப்பேன். பாடல் காட்சிகள் தவிர மற்ற காட்சிகளில் குடும்பப் பாங்கா வருவாங்க. ரொம்ப டீசன்டான கேரக்டர். நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர். நான் அவங்களை தெலுங்குப் படம் 'ரணம்' பார்த்து அதில் அவங்களோட நடிப்பைப் பார்த்து அசந்து போய் கமிட் பண்ணினேன். காம்னான்னா க்ளாமர்கேர்ள் அப்படிங்கற இமேஜை இந்தப் படம் உடைச்சு எறியும். அவங்களுக்கு நல்ல பெயரை வாங்கித் தரும். பாடல் காட்சிகள் பேன்டசியா இருக்கும். மற்றபடி குடும்பத்தோட பார்க்கும்படியான காதல்கதைதான் இது.

ஜீவன் எந்த அளவுக்கு பொருந்தியிருக்கிறார். அவருக்கு நெகடிவ் கேரக்டரா?

webdunia photoWD
நான் ஸ்கிரிப்ட் ரெடியானதும் யாரை இதில் நடிக்க வைக்கிறதுன்னு குழப்பத்தில் இருந்தேன். அப்போதுதான் 'திருட்டுப் பயலே' படம் பார்த்தேன். என் குழப்பம் தெளிவாய்டுச்சு. ஜீவன் தான் நம் ஹீரோ விக்கி கேரக்டர்னு முடிவு பண்ணிட்டேன். முழுக் கதையும் சொன்னேன். நடிக்க வந்தவர் முதல் நாளிலேயே என் கூட ஐக்கியமாய்ட்டார். கேரக்டரின் உள்ளே போய் நடிக்க ஆரம்பிச்சுட்டார். ஜீவன் உள்ளுக்குள் நல்லவர். ஊருக்குள் கெட்டவர். இதுதான் கேரக்டர். நெகடிவ் கேரக்டர் இல்லை.

வெளிநாட்டுப் படப்பிடிப்பு மோகத்தில் நீங்களும் சிக்கிவிட்டீர்களா?

" உண்மையைச் சொன்னால் பிரம்மாண்டமான செட் போடுற செலவைவிட வெளிநாடு சுவிட்சர்லாந்து போய் ரெண்டு பாடல் முடிச்சிட்டு வந்தோம். அது கதைக்கு பொருத்தமா இருக்கும் பாருங்க. உள்நாட்டிலும் தேனி, திண்டுக்கல், கொடைக்கானல், ராமநாதபுரம், பழனி, சென்னைன்னு பல இடங்களை அள்ளிட்டு வந்திருக்கோம். குறிப்பா திண்டுக்கல்ல பெரிய குளத்துல நடக்கும் மீன் பிடி திருவிழாவை ஐயாயிரம் பேரை வச்சி அசத்தலா ஷூட் பண்ணியிருக்கோம். இதுவரை இந்தக் காட்சி திரையுலகம் காணாத காட்சின்னு சொல்லுவேன்."

கதையில் கருத்து சொல்வது உண்டா?

இந்த உலகத்திலேயே சுலபமானது அடுத்தவங்களுக்கு அறிவுரை சொல்வதுதான். நான் கதையை அதன் போக்கில் பயணம் செய்யவிட்டிருக்கேன். ஊரார் பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆளான ஹீரோ, எல்லாராலும் தப்பா பார்க்கப் படறான். பேசப்படறான். வருத்தப்படுத்துறாங்க. அவன் மேல பரிவும் அக்கறையும் கொண்ட முதல் மனுஷியா ஒருத்தி வர்றா. அவதான் ஹீரோயின். அவளே அதிர்ஷ்டசாலியா ஆராதிக்கப்படற கேரக்டர்.

இப்படி இரு துருவங்களா இருக்கும் துரதிர்ஷ்டசாலிக்கும் அதிர்ஷ்டசாலிக்கும் ஒரு ஈர்ப்பு வருது. அதுதான் காதலாகுது. அவனை மச்சக்காரனாக்குது. இதுக்கு இடையில் பல சம்பவங்கள் நடக்குது. திருப்பங்கள் வருது. ஹீரோ ஹீரோயின்தான் மெயின் டிராக். கதையோட டிராவல்ல மற்ற கேரக்டர்கள் வந்து போறாங்க.

படத்தை தீபாவளிக்கு கொண்டு வர்ற மும்முரத்திலிருக்கோம் என்று சொல்லி முடித்த இயக்குனரிடம் நாம் சொல்லாத சேதி...

' திருட்டுப்பயலே' நாயகன் ஜீவா. 'இதயத்திருடன்' நாயகி காம்னா, 'கள்வனின் காதலி' இயக்குனர் தமிழ்வாணன் இப்படி மூன்று திருடர்கள் இணைந்து ரசிகர்களின் இதயங்களை திருட வருகிறார்கள். இவர்களை எண்ணி உஷாராக இருக்க வேண்டாம். குஷாலாக இருக்கலாம்.

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments