webdunia photoWD சினிமாவில் ஒரு துறையில் ஈடுபட்டவர்கள் மற்றொரு துறையில் ஈடுபடுவதும் வெற்றி பெறுவதும் சகஜமாகி வருகிறது. நடன இயக்குநர் கமல் நடிகராகி புகழ்பெற்றார். இயக்குநர்களில் மணிவண்ணன் முதல் சுந்தர் சி. வரை நடிகர்களானவர்கள் ஏராளம். இந்த வரிசையில் அண்மையில் இடம் பெற்றிருப்பவர் பா. விஜய். வெற்றிகரமான பாடலாசிரியராக வலம் வந்து கொண்டிருப்பவர், தேசிய விருது வரை வசப்படுத்திக் கொண்ட கவிஞர் இப்போது நடிகராகியிருக்கிறார். தாய் காவியம் என்கிற படத்தில்...