Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிச.14 வித்யாபாலன் திருமணம்

Webdunia
புதன், 21 நவம்பர் 2012 (21:06 IST)
FILE
நடிகை வித்யாபாலன் அவரது காதலர் சித்தார்த் ராய் கபூர் இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கிறது.

தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் மோசமாக புறக்கணிக்கப்பட்ட வித்யாபாலனை இந்திப் படவுலகம் அரவணைத்துக் கொண்டது. படிப்படியாக கஹானி, தி டர்ட்டி பிக்சர் போன்ற ஹீரோயின் ஓ‌ ரியண்ட் படங்களில் நடிக்குமளவுக்கு உயர்ந்தார்.

மார்க்கெட் உயர்ந்தது போலவே யு டிவி சித்தார்த்துடனான காதலும் வளர்ந்தது. கடந்த மே மாதம் தாங்கள் காதலிப்பது உண்மைதான் என்று ரகசியத்தை வித்யாபாலன் போட்டுடைத்தார். அப்போதே பேட்டி என்று செல்லும் நிருபர்களின் தவிர்க்க முடியாத கேள்வியாக ஆனது, நீங்க எப்போ திருமணம் செய்துக்கப் போறீங்க?

விரைவில் திருமணம் என்று சொல்லி வந்தவர்கள் டிசம்பர் 14-ஐ அதற்காக தேர்வு செய்துள்ளனர். சித்தார்த் ராய் கபூர் வடஇந்தியர். வித்யாபாலன் மலையாளி. இருவ‌ரின் மரபுப்படி இரண்டு முறைகளில் திருமணம் நடக்கவுள்ளது.

நம்மூர் நடிகைகள் போல் திருமணத்துக்குப் பிறகு நடிப்பா? சேச்சே என்றெல்லாம் வித்யாபாலன் கூறாதது ஆறுதல்.

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments