Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிச.14 வித்யாபாலன் திருமணம்

டிச.14 வித்யாபாலன் திருமணம்
, புதன், 21 நவம்பர் 2012 (21:06 IST)
FILE
நடிகை வித்யாபாலன் அவரது காதலர் சித்தார்த் ராய் கபூர் இவர்களின் திருமணம் டிசம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கிறது.

தென்னிந்திய மொழிகளில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் மோசமாக புறக்கணிக்கப்பட்ட வித்யாபாலனை இந்திப் படவுலகம் அரவணைத்துக் கொண்டது. படிப்படியாக கஹானி, தி டர்ட்டி பிக்சர் போன்ற ஹீரோயின் ஓ‌ரியண்ட் படங்களில் நடிக்குமளவுக்கு உயர்ந்தார்.

மார்க்கெட் உயர்ந்தது போலவே யு டிவி சித்தார்த்துடனான காதலும் வளர்ந்தது. கடந்த மே மாதம் தாங்கள் காதலிப்பது உண்மைதான் என்று ரகசியத்தை வித்யாபாலன் போட்டுடைத்தார். அப்போதே பேட்டி என்று செல்லும் நிருபர்களின் தவிர்க்க முடியாத கேள்வியாக ஆனது, நீங்க எப்போ திருமணம் செய்துக்கப் போறீங்க?

விரைவில் திருமணம் என்று சொல்லி வந்தவர்கள் டிசம்பர் 14-ஐ அதற்காக தேர்வு செய்துள்ளனர். சித்தார்த் ராய் கபூர் வடஇந்தியர். வித்யாபாலன் மலையாளி. இருவ‌ரின் மரபுப்படி இரண்டு முறைகளில் திருமணம் நடக்கவுள்ளது.

நம்மூர் நடிகைகள் போல் திருமணத்துக்குப் பிறகு நடிப்பா? சேச்சே என்றெல்லாம் வித்யாபாலன் கூறாதது ஆறுதல்.

Share this Story:

Follow Webdunia tamil