Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமீர் கான், கரீனா : புதிய ஜோடி!

Webdunia
வெள்ளி, 7 நவம்பர் 2008 (10:45 IST)
அமீர ் கானும், கரீனா கபூரும் இதுவரை இணைந்து நடித்ததில்லை. குரு படத்துக்குப் பிறகு மணிரத்னம் லஜ்ஜோ என்ற படத்தை இயக்குவதாகவும், அதில் அமீர், கரீனா இணைந்து நடிப்பதாகவும் கூறப்பட்டது.

துரதிர்ஷ்டவசமாக அந்த ப்ராஜெக்ட் ட்ராப்பாக, இருவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு தள்ளிப் போனது. தற்போது ராஜ்குமார் இரானியின் 3 இடியட்ஸ் படத்தில் இருவரும் இணைந்து நடித்து வருகிறார்கள்.

கஜினி படத்தின் போது அசினை புகழ்ந்ததை போல தற்போது கரீனாவை புகழ்ந்து வருகிறார் அமீர ் கான். அதேபோல் அமீரின் புகழ் பாடுவதுதான் இப்போது கரீனாவின் வேலை.

லடாக்கில் நடந்த படப்பிடிப்பில் இருவரின் நெருக்கத்தைப் பார்த்தவர்கள் சபாஷ் சரியான ஜோடி என்று பாராட்டுகிறார்கள். இந்தப் படத்தில் நேகா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் கரீனா. இவரது தந்தையாக பூமன் இரானி நடிக்கிறார்.

படத்தின் 3 இடியட்களில் ஒருவர் மாதவன் என்பது தெரியும்தானே.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மணிகண்டன் நடிப்பில் உருவாகும் fam-com ‘குடும்பஸ்தன்’ முதல் பார்வை வெளியீடு!

தூம் 4 படத்தில் கதாநாயகனாகும் ரன்பீர் கபூர்!

கேம்சேஞ்சர் படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அஜித் மட்டும்தான் போன் பண்ணி விசாரித்தார்… அவர் படத்தில் நடிக்க சொன்னார்… பாடகி சுசித்ரா பகிர்ந்த தகவல்!

அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில், ஹாரர் திரில்லர் "டிமான்ட்டி காலனி 2" திரைப்படம், ZEE5 இல் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது!

Show comments