சிலர் விலகி ஓடினாலும் துரத்திச் சென்று கிரீடம் சூட்டுகிறார்கள். ஓவியர் ஹூசைனின் கனவுக் கன்னி மாதுரி தீட்சித் கல்யாணமாகி கணவருடன் அமெரிக்காவில் செட்டிலாகி வருடம் பலவாகிறது. இரண்டு குழந்தைகளும் இருக்கிறார்கள்.
பழைய நினைப்பு வரும்போது பாலிவுட்டுக்கு கிளம்பி வந்து சின்ன வேடம் ஒன்றில் நடித்துச் செல்வார்.
முக்கால்வாசி அமெரிக்கப் பிரஜையாகிவிட்ட அவரை தேடிக் கண்டுபிடித்து பத்மஸ்ரீ விருது கொடுத்துள்ளது இந்திய அரசு. விருது வாங்க கணவன் பிள்ளைகளுடன் வந்தவர் தனது நிறைவேறாத ஆசை ஒன்றைச் சொல்லி அனைவரையும் நடுங்க வைத்தார்.
மாதுரிக்குச் சரியாக ஒரு டஜன் குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஆசை. கணவரின் நலன் கருதி இரண்டோடு நிறுத்திக் கொண்டாராம்.
மாதுரிக்கு வயசு இருக்கிறது. கணவர் மனது வைத்தால் இனியும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம்.