Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக் சுடர் : அமீர் கான் விளக்கம்!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (16:35 IST)
சீனாவின் பீஜிங்கில் ஆகஸ்ட் மாதம் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. வரும் 17 ஆம் தேதி ஒலிம்பிக் சுடர் டெல்லி வருகிறது. ஒன்பது கிலோ மீட்டராக திட்டமிட்டிருந்த ஒலிம்பிக் சுடர் ஓட்டம், பாதுகாப்பு கருதி நான்கு கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது.

இந்த ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் நடிகர் அமீர் கான் கலந்துகொள்கிறார். சீன அரசு திபெத்தியர்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவதைக் கண்டித்து இந்திய கால்பந்து அணியின் தலைவர் பூட்டியா ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் கலந்துகொள்வதில்லை என அறிவித்தார். இது குறித்து அமீர் கானிடம் கேட்டதற்கு,

" திபெத்தியர்கள் கோரிக்கைக்கு நான் ஆதரவளிக்கிறேன். அதேநேரம் ஒலிம்பிக் என்பது வேற்றுமைகளை களைந்து ஒற்றுமையை வலியுறுத்தும் ஒரு நிகழ்வு. அதனால் ஒலிம்பிக் சுடர் ஓட்டத்தில் கலந்து கொள்வேன். இதை வைத்து நான் சீனாவை ஆதரிப்பதாக கருதக்கூடாது" என்று கூறியுள்ளார்.

ஒலிம்பிக் சுடர் இந்தியா வரும்போது திபெத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடலாம் என்பதால்தான் ஓட்ட தூரம் குறைக்கட்டுள்ளது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

Show comments