சல்மான் கான் ஒரு பாடி பில்டர் என்பது தெரியும். அவ்வப்போது தனது உடல் வலிமையை அடுத்தவர்களை அடித்து உறுதி செய்து கொள்வது சட்டைப் போடாத இந்த கட்டுமஸ்தான நடிகரின் ஸ்டைல்.
webdunia photo
FILE
சமீபத்தில் தனது தோழி கத்ரினா கைஃபுடன் காஃபி ஷாப் சென்றார் சல்மான். அங்கு இருவருக்குள்ளும் தகராறு வர கத்ரினா கன்னத்தில் அறைந்தார் சல்மான்.
ஆங்கில செய்திச் சேனல்களின் சேவையால் இந்த அறை விவகாரம் வெளியுலகுக்கு தெரிந்து, கத்ரினாவிடம் பலரும் துக்கம் விசாரித்தனர்.
இதில் கோபமான கத்ரினா, சல்மான் என்னை அடிக்கவில்லை, அப்படியொரு சம்பவம் எங்களுக்குள் நடக்கவேயில்லை என பத்திரிக்கை மூலமாக மறுப்பு தெரிவித்தார்.
சல்மானின் உடல் வலிமை தெரிந்த யாரும் கத்ரினாவின் மறுப்பை நம்பவில்லை. இதற்குமுன் சல்மானின் உடல் வலிமை பரிசோதனைக்கு ஐஸ்வர்யா ராய், ஷாருக் கான் ஆகியோர் ஆளாகியிருக்கிறார்கள்.