Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பன்சுக்கு பர்மிஷன்

பன்சுக்கு பர்மிஷன்
, செவ்வாய், 16 மார்ச் 2010 (14:25 IST)
சேனாதிபதியின் ஹண்‌ட்டர் படத்திலிருந்த பன்ச் டயலாக்குகளை வலுக்கட்டாயமாக எடிட் செய்தது சூ‌ரிய நிறுவனம். அரசியல் விசுவாசம்தான் காரணம்.

ஆனால் இப்போது அவர்களுக்கு போட்டியாக அதிகார குடும்பத்திலிருந்தே இரண்டு தயா‌ரிப்பாளர்கள் முளைத்திருக்கிறார்கள். மேலும், அபி‌ரிதமான விளம்பர ஸ்டண்டை அவர்களும் அடிக்கத் தொடங்கிவிட்டனர்.

இதனால் சூ‌ரியனின் கல்லாவில் சமீபமாக காசு நிறையவில்லை. இதனால் கடுப்பான நிறுவனம் சேனாதிபதியின் புதிய கடல்வாழ் உயி‌ரினம் படத்தில் எப்படி வேணும்னாலும் பன்ச் வசனம் பேசுங்க என்று கைகட்டை அவிழ்த்திருக்கிறது.

காசுக்கு முன்னால் சொந்தமாவது பந்தமாவது.

Share this Story:

Follow Webdunia tamil