காமெடியை நம்பி எடுக்கப்பட்ட இப்படம் சென்ற வார இறுதியில் 8.3 மில்லியன் டாலர்கள் கலெக்ஷனுடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.
4.
Non-Stop லியாம் நீஸன் நடித்திருக்கும் இந்த ஆக்ஷன் படம் மூன்றாவது வாரத்தில் பாக்ஸ் ஆபிஸில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் சென்ற வார இறுதி வசூல் 10.6 மில்லியன் டாலர்கள். இதுவரை 68.8 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
3.
Need for Speed ஆரோன் பால் நடிப்பில் சென்ற வாரம் வெளியான இப்படம் ஆக்ஷன் விரும்பிகளுக்கானது. முக்கியமாக கார் ரேஸ் ஆக்ஷனை ரசிப்பவர்கள் என்றால் இது உங்களுக்கான படம்.
முதல்வார இறுதியில் இதன் கலெக்ஷன் 17.8 மில்லியன் டாலர்கள்.
2. 300:
Rise of an Empire எம்பயரின் பட்ஜெட் 100 மில்லியன் டாலர்கள். முதல் பத்து தினங்களில் 78.3 மில்லியன் டாலர்களே வசூலித்துள்ளது.
சென்ற வார இறுதியில் இதன் கலெக்ஷன் 19.1 மில்லியன் டாலர்கள்.
1.
Mr. Peabody & Sherman மீண்டும் ஒரு அனிமேஷன் படம். ட்ரீம்வொர்க்ஸ் 145 மில்லியன் டாலர்கள் செலவழித்து எடுத்தப் படம்
முதல் பத்து தினங்களில் யுஎஸ் ஸில்மட்டும் 63.2 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.குறைவுதான். சென்ற வார இறுதியில் இதன் கலெக்ஷன் 21.2 மில்லியன் டாலர்கள்.