இந்த வாரம் அர்னால்ட் நடித்த Sabotage வெளியாகிறது. ஆக்ஷன் கதைதான். டேவிட் அய்யர் இயக்கம். அய்யர் என்பது சாதியில்லை, பெயர். அமெரிக்கர்.
கலிபோர்னியா மாகாணத்தின் மேயர் பொறுப்பேற்றதால் 2005 லிருந்து 2009 வரை அர்னால்ட் எந்தப் படமும் நடிக்கவில்லை. 2010 ல் சில்வஸ்டர் ஸ்டாலோனின் த எக்ஸ்பென்டபிள்ஸ் மூலம் மீண்டும் திரைக்கு வந்தார். அதன் பிறகு தொடர்ச்சியாக படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்த வருடம் மட்டும் மூன்று படங்கள் அர்னால்ட் நடிப்பில் வெளிவர உள்ளன. Sabotage , Maggi e. மூன்றாவது த எக்ஸ்பென்டபிள்ஸ் 3.
2015 ல் டெர்மினேட்டர் சீரிஸின் புதிய படமான டெர்மினேட்டர் - ஜெனிசிஸ் வெளியாக உள்ளது. அதில் டெர்மினேட்டராக அர்னால்ட் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அறுபதும் அதற்கு மேலும் வயதுள்ள லியாம் நீஸன், அர்னால்ட் போன்றவர்கள்தான் ஹாலிவுட்டில் ஆக்ஷனில் பட்டைய கிளப்புகிறார்கள்.
ஹாலிவுட் கிழவர்களின் தேசம்.