Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யு.எஸ் பாக்ஸ் ஆபிஸ்: ‘அவதார்’ முதலிடம்

யு.எஸ் பாக்ஸ் ஆபிஸ்: ‘அவதார்’ முதலிடம்
, சனி, 16 ஜனவரி 2010 (16:47 IST)
யு.எஸ் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது அவதார். அமெரிக்கர்களைக் கவர்ந்த இன்னொரு படம், ஷெர்லாக் ஹோம்ஸ்.

5. It’s complicated: ஐந்தாவது இடத்தில் இட்ஸ் காம்ப்ளிகேட்டட். இதன் சென்ற வார வசூல் 11 மில்லியன் டாலர்கள். இதுவரை 76.4 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது.

4. Day Breakers: சென்ற வாரம் வெளியான இந்தப் படம் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் 3 தினங்களில் இப்படம் வசூலித்திருப்பது 15.1 மில்லியன் டாலர்கள்.

3.Alvin and the Chipmunks : The Squeakquel: பாடும் எலிகளைப் பற்றி இப்படம் இதுவரை 178 மில்லியன் டாலர்களை வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இதன் சென்ற வார இறுதி வசூல் மட்டும் 16.6 மில்லியன் டாலர்கள்.

2.Sherlock Holmes: கைய் ரிச்சியின் இன்னொரு அட்டகாசமான படைப்பு. சென்ற வார இறுதியில் 16.6 மில்லியன் டாலர்களை வசூலித்த இந்தப் படம் இதுவரை 165 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

1.Avatar: தொடர்ந்து முதலிடத்தில் அவதார். சென்ற வாரத்திலும் வசூலில் பெரிதாக மாற்றம்- அதாவது பின்னடைவு இல்லை. 50.3 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதுவரையான மொத்த வசூல், 431 மில்லியன் டாலர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil