Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வார்னர் பிரதர்ஸ் ஆட் குறைப்பு

Webdunia
அமெரிக்க திரைப்பட தயாரிப்பின் முன்னணி நிறுவனமான வார்னர் பிரதர்ஸ் உலகம் முழுதும் உள்ள அந்த நிறுவனத்தின் பணியாளர்களில் 10 சதவீதத்தினரை வீட்டிற்கு அனுப்ப முடிவெடுத்துள்ளது.

அதாவது சுமார் 800 பணியாளர்கள் வேலையிழக்கலாம் என்று தெரிகிறது.

அமெரிக்காவில் துவக்கி வைக்கப்பட்ட உலகப ் பொருளாதார நசிவு அங்குள்ள சினிமாத் துறையையும் விட்டு வைக்குமா என்ன? அதனால் செலவுகளை கட்டுப்படுத்த வார்னர் பிரதர்ஸ் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

இந்த அறிவிப்பையடுத்து பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகளின் விலை சரிந்து பங்கு ஒன்றிற்கு 8.94 டால‌ர்களாக குறைந்துள்ளது.

இந்த ஆட்குறைப்பு நடவடிக்கைகளால் நிறுவனம் ஆண்டொன்றிற்கு 50 மில்லியன் டாலர்கள் மிச்சப்படுத்துகிறது என்று அந்த நிறுவனம் கூறுகிறது.

இத்தனைக்கும் 2008ஆம் ஆண்டு அந்த நிறுவனம் "டார்க் நைட்", "செக்ஸ் அன்ட் தி சிட்டி", "கெட் ஸ்மார்ட்" மற்றும் "ஃபோர் கிறிஸ்மஸ்" ஆகிய திரைப்படங்களின் மூலம் உலக அளவிலான வருவாயாக 1.77 பில்லியன் டாலர்கள் ஈட்டியுள்ளது.

எவ்வளவு லாபங்கள் குவித்தாலென்ன, பொருளாதார நசிவு என்றால் முதலாளிகள் கண்களில் முதலில் தென்படுவது பணியாளர்கள்தானே!
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?