Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீஜிங் ஒலிம்பிக்கை புறக்கணியுங்கள் : ரிச்சர்ட் கெர்ரி!

Webdunia
செவ்வாய், 4 செப்டம்பர் 2007 (16:52 IST)
தனது நாட்டின் ஒரு பகுதி மக்களையே மோசமாக நடத்திவரும் சீன அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிக்க வேண்டும் என்று திபெத் விடுதலை ஆதரவாளரான ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர்ரி கூறியுள்ளார்.

புத்த மத பற்றாளரும், திபெத்திற்கான சர்வதேச பிரச்சார நிர்வாகியுமான ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெர்ரி, சீனாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளை புறக்கணிப்பது திபெத்தின் எதிர்காலத்தை சீனா நிர்ணயிப்பதற்கான ஒரு அழுத்தமாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த மாதிரியான புறக்கணிப்புகளுக்கு மதிப்பு உண்டு. அதனால் ஒன்றும் நடந்துவிடப் போவதில்லை. ஆனால், உணர்வுப்பூர்வமானதான இருக்கும். தங்கள் மக்களையும், மற்ற மக்களையும் மதிக்காத ஒரு நாட்டிற்கு எதிர்காக உலகம் மதிப்பளிக்க வேண்டும் என்று கெர்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஒருகட்டத்தில் அவர்கள் கடைபிடித்துவரும் நடைமுறை அவர்களுக்கு பயனிக்காமல் போய்விடும் என்றும், இந்த மாதிரியான முதலாளித்துவமும், பொதுவுடைமையும் ஒரு நிலையில் வெடித்துச் சிதறும் என்றும் கெர்ரி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

சூரியின் அடுத்த படத்தில் இணையும் பிரியாமணி!

விஜய் சேதுபதியை இயக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்!

பாதியாகக் குறைக்கப்படும் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் பட்ஜெட்!

Show comments