Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இரும்பு குதிரையில் லட்சுமி ராய்

Webdunia
வியாழன், 27 மார்ச் 2014 (10:36 IST)
அதர்வா, ப்ரியா ஆனந்த் நடிக்கும் இரும்பு குதிரையில் மீண்டும் லட்சுமி ராய் சேர்க்கப்பட்டுள்ளார். படத்தில் அவர் பைக் ரேஸராக வருவது குறிப்பிடத்தக்கது.
FILE

இரும்பு குதிரையை யுவராஜ் இயக்குகிறார். பைக் ரேஸை மையப்படுத்திய கதை. பைக் ரேஸராக அதர்வா. இந்தப் படத்தில் லட்சுமி ராயும் பைக் ரேஸராக நடிப்பதாக கூறப்பட்டது. இதற்காக ரேஸ் பைக்குகளை ஓட்டி லட்சுமி ராய் பயிற்சி எடுத்துக் கொண்டார்.

படப்பிடிப்பு தொடங்கி பல வாரங்கள் கழிந்த பிறகும் இயக்குனர் தரப்பிலிருந்து லட்சுமி ராய்க்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஒரு கட்டத்தில் வெறுத்துப் போய் இரும்பு குதிரையில் நான் நடிக்கவில்லை என்று அறிவித்தார் லட்சுமி ராய். அந்தப் பிரச்சனை அனைவர் மனதிலிருந்தும் மறைந்து போன நிலையில் மீண்டும் பந்தய குதிரையும், லட்சுமி ராயும் ராசியாகியுள்ளனர்.
FILE

இயக்குனர் யுவராஜ் லட்சுமி ராயிடம் படத்தின் கதை மற்றும் அவரின் கதாபாத்திரம் குறித்து மீண்டும் விளக்கியிருக்கிறார். அதில் கன்வின்ஸ் ஆனவர் பைக் ரேஸராக நடிக்க மீண்டும் ஒப்புக் கொண்டார்.

லட்சுமி ராயின் போர்ஷன் குறைவாக இருந்ததால்தான் அவர் சம்பந்தப்பட்ட காட்சியை இதுவரை எடுக்காமலிருந்தனர். மொத்தம் இரண்டு வாரங்கள் அவர் கால்ஷீட் தந்திருப்பதாக தெரிகிறது.
FILE

பெங்கால் குதிரை இணைந்த பிறகே பந்தய குதிரையின் கிளாமர் வேல்யூ அதிகப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

Show comments