அலெக்ஸ் பாண்டியன் இயக்குனரின் படத்தில் ஜெயம் ரவி

Webdunia
வியாழன், 27 மார்ச் 2014 (10:25 IST)
அலெக்ஸ் பாண்டியன் என்ற அட்டர் பிளாப்புக்குப் பிறகு இயக்குனர் சுராஜின் பெயர் கோடம்பாக்கத்தில் மங்க ஆரம்பித்தது. தனுஷிடம் கால்ஷீட் கேட்டவர் கடைசிவரை அது கிடைக்காமல் போக இறுதியில் ஜெயம் ரவி பக்கம் திரும்பியுள்ளார்.
FILE

அண்ணன் ஜெயம்ராஜா இயக்கத்திலும், ரோமியோ ஜுலியட் என்ற படத்திலும் தற்போது நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அத்துடன் சுராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

ஆனால் இந்தப் படம் குறித்து ஜெயம் ரவி தரப்பு இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. சுராஜ் மூலமாகதான் இப்படியொரு முயற்சி நடந்து வருவது வெளியுலகுக்கு தெரியும். காமெடிக்கு முக்கியத்துவம் தந்து ஸ்கிரிப்டை உருவாக்கியிருப்பதாகவும், பேச்சுவார்த்தை நடக்கிறது, இன்னும் எதுவும் முடிவாகவில்லை என்றும் சுராஜ் கூறினார்.

அலெக்ஸ் பாண்டியன் படத்தை தந்தவரின் இயக்கத்தில் நடிக்க யாருக்காக இருந்தாலும் தில் வேண்டும்.

சில விஷயங்களில் தில் இல்லாமலிருப்பதே நல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாளை விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் இல்லை.. அதிரடியாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்..!

படையப்பா ரீரிலீஸ் சக்சஸ் மீட்.. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிகுமார் பங்கேற்பு..!

சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தேதி என்ன? பட குழுவினர் வெளியிட்ட தகவல்..!

'U/A' சான்றிதழ் வழங்க முடிவெடுத்த பிறகு, ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? ஜனநாயகன் வழக்கில் நீதிபதி கேள்வி..!

‘ஜனநாயகன்’ தணிக்கை சான்றிதழ் வழக்கு: சென்னை உயர்நீதிமன்றத்தில் பரபரப்பான வாதம்..

Show comments