Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆடாம ஜெயிச்சோமடா - ரைட்டராக மாறிய ஆக்டர்

ஆடாம ஜெயிச்சோமடா - ரைட்டராக மாறிய ஆக்டர்
, வியாழன், 13 மார்ச் 2014 (15:49 IST)
தில்லு முல்லு படத்தை ரீமேக் செய்த பத்ரி ஆடாம ஜெயிச்சோமடா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். கிரிக்கெட் ஊழலை மையமாக வைத்து... என்னது, ரொம்ப சீரியஸா௦ன சப்ஜெக்டா? அதெல்லாம் கிடையாது. அங்கேதான் பத்ரி வைக்கிறார் ஒரு ட்விஸ்ட்.
FILE

கிரிக்கெட் ஊழல் படத்தில் இருக்கிறது. ஆனால் சீரியஸாக இல்லாமல் செம காமெடியாக அதனை எடுத்துள்ளார். கிரிக்கெட் ஊழலில் படா தலைகளுக்கெல்லாம் பங்கிருக்கிறது. எங்கே பத்ரியின் படம் நம்முடைய ஊழல் முகமூடியை கிழித்துவிடுமோ என்று அந்த படா தலைகளுக்குத் தோன்றினால் பத்ரியின் படம் பெட்டிக்குள்ளிருந்து வெளியே வருவதே சந்தேகமாகிவிடும்.

அதனால் படத்தை விளம்பரப்படுத்தும் போதே, சுவாரஸிமான கற்பனை சம்பவங்களையும், கற்பனை கதாபாத்திரங்களையும் சேர்த்து காமெடியாக எடுக்கப்பட்டுள்ள படம் என்று இன்ட்ரோ தருகிறார்.

அதை உறுதிப்படுத்துகிற ஸ்டார் காஸ்டிங். கருணாகரன், சிம்ஹா, விஜயலட்சுமி, பாலாஜி, சித்ரா லட்சுமணன்... இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் கே.எஸ்.ரவிக்குமார்.

இந்தப் படத்தில் இரண்டு பேரை பத்ரி அறிமுகப்படுத்துகிறார். ஒருவர் இசையமைத்திருக்கும் ஷான் ரோல்டன். இவர் ரொமான்டிக் சரித்திரக்கதை எழுத்தாளர் சாண்டில்யனின் பேரன். இன்னொருவர் ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷின் மகன் ஹரி தினேஷ்.
webdunia
FILE

சுந்தர் சி. இயக்குனராக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய கலகலப்பு படத்துக்கு பத்ரிதான் வசனம். சுந்தர் சி. படத்துக்கே வசனகர்த்தா என்றால் பத்ரியின் காமெடி வளத்தை புரிந்து கொள்ளலாம். அப்படிப்பட்டவர் ஆடாம ஜெயிச்சோமடா படத்தின் வசனத்தை எழுதும் பொறுப்பை தந்தது சிவாவிடம். நடிகர் மிர்ச்சி சிவாவேதான்.

சிவாவின் ஆக்டிங்கைப் போலவே வசனமும் அண்டர்ப்ளேயாக இருக்குமோ?

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil