Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெருச்சாளியில் நடிக்கும் பூனம் பஜ்வா

பெருச்சாளியில் நடிக்கும் பூனம் பஜ்வா
, வியாழன், 13 மார்ச் 2014 (12:10 IST)
அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் மலையாளத்தில் இயக்கும் படம் பெருச்சாளி. மோகன்லால் நடிக்கும் இந்த காமெடி த்ரில்லரில் பூனம் பஜ்வா முக்கிய வேடம் ஏற்கிறார்.
FILE

அச்சமுண்டு அச்சமுண்டு படத்தை முழுக்க யுஎஸ்ஏ யில் எடுத்தார் அருண் வைத்தியநாதன். பெருச்சாளியின் பெரும்பாலான காட்சிகள் யுஎஸ் ஸிலும் சில காட்சிகள் கேரளாவிலும் எடுக்கப்படுகின்றன. முகேஷ், பாபுராஜ் உள்பட பலர் இதில் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தில் புதிதாக பூனம் பஜ்வா இணைந்துள்ளார். படத்தில் வரும் பாடல் ஒன்றுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு கிளாமராக நடிக்க உள்ளார் பூனம் பஜ்வா. இந்தப் பாடல் காட்சி படத்தின் கதையோடு இணைந்து வருமாம். அத்துடன் சிறிய கதாபாத்திரத்திலும் பஜ்வா நடிக்க உள்ளார்.

கல்யாண சமையல் சாதம் படத்துக்கு இசையமைத்த அரோரா பெருச்சாளிக்கும் இசையமைத்துள்ளார். தமிழிலும் படத்தை வெளியிடும் திட்டம் உள்ளது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil