மேக்கப் பாக்ஸை கீழே வைத்து புத்தகப்பையை தூக்கியவர் மீண்டும் மேக்கப் பாக்ஸை எடுத்துள்ளார். எஸ், ஹி இஸ் பேக்.
கஜாலாவைப் போல் பிரேக் எடுத்துக் கொண்டவர்கள் திரும்பி வரும்போது அழகிலும், கவர்ச்சியிலும் கணிசமான பொலிவை இழந்திருப்பார்கள். ஆச்சரியம், கஜாலா விஷயத்தில் அப்படியே உல்டா. உஜாலாவில் வெளுத்த மாதிரி அப்படியொரு புத்துணர்ச்சி கஜாலாவிடம். தனது ரீஎன்ட்ரியை முன்னிட்டு அவர் இன்டஸ்ட்ரியில் உலவவிட்டிருக்கும் படங்களைப் பார்த்தால் ஆடிப்போய்விடுவார்கள் இன்றைய முன்னணி ஹீரோயின்கள்.
ஆனால் சினிமாவில் அதிர்ஷ்டமும் கைகொடுக்க வேண்டும். அது கஜாலாவுக்கு எத்தனை சதவீதம் இருக்கிறது என்பதைப் பொறுத்தே சினிமாவில் அவரின் ரீஎன்ட்ரி அமையும்.
மேலும் படங்கள்: