Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஞ்சான் வெளியீட்டு தேதி

Webdunia
திங்கள், 10 மார்ச் 2014 (19:17 IST)
அஞ்சான் படத்தின் வெளியீட்டு தேதி வெளியாகியிருக்கிறது.
FILE

லிங்குசாமி இயக்கத்தில் வளர்ந்து வரும் அஞ்சானின் படப்பிடிப்பு மும்பையில் நடந்து வருகிறது. நீண்ட முப்பது நாள் ஷெட்யூல் இது. இந்த ஷெட்யூல் முடிந்தால் படத்தின் முக்கால்வாசி டாக்கி போர்ஷன் முடிந்துவிடும். அடுத்த மாதம் கடைசி ஷெட்யூல்.

படவெளியீடு குறித்து இயக்குனர் லிங்குசாமியுடன் பேசியுள்ளார் யுடிவியின் தமிழக நிர்வாகி தனஞ்செயன். யுடிவியும், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும் இணைந்துதான் அஞ்சானை தயாரித்து வருகின்றன.

ஏப்ரல் 14 அஞ்சா‌னின் கடைசி ஷெட்யூல் தொடங்கும். அன்று - அன்றுதான் தமிழ்ப் புத்தாண்டு - படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட தீர்மானித்துள்ளதாகவும், படம் ஆகஸ்ட் 15 சுதந்திர தின ஸ்பெஷலாக வெளியாகும் எனவும் தனஞ்செயன் சமூகவலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
FILE

யுடிவி தற்போது விஷாலுடன் இணைந்து நான் சிகப்பு மனிதனை தயாரித்து வருகிறது. ஏப்ரல் 11 அப்படம் வெளியாகிறது. அதனுடன் அஞ்சான் பட ட்ரெய்லரை வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments