Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேலையில்லா பட்டதாரியில் நடிக்கும் சுரபி

வேலையில்லா பட்டதாரியில் நடிக்கும் சுரபி
, வியாழன், 6 மார்ச் 2014 (18:32 IST)
தனுஷுடன் வேலையில்லா பட்டதாரி படத்தில் சுரபி நடித்து வருகிறார்.தனுஷின் வொண்டர்பார் தயாரிக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. பொல்லாதவன், ஆடுகளம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த வேல்ராஜ் படத்தை இயக்கி வருகிறார். அமலா பால் ஹீரோயின்.
FILE

படப்பிடிப்பில் வேல்ராஜைவிடவும் தனுஷ்தான் இயக்குனர் வேலையில் அதிகம் ஈடுபாடு காட்டுகிறார். அவர் விரைவில் அதிகாரப்பூர்வமாக இயக்குனர் ஆவதற்கான பயிற்சிக் களம்தான் இந்தப் படம்.

அமலா பால் தனுஷின் ஜோடியாக நடித்தாலும் வேறொரு ஹீரோயினும் படத்தில் இருக்கிறார். அவர் சுரபி. இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகமானவர். வேலையில்லா பட்டதாரியில் ஒரு வேடம் இருக்கிறது என்று தனுஷ் அணுகிய போது மறுப்பு சொல்லாமல் அந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார். தற்போது சரபி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகின்றனர். படத்தின் திருப்புமுனை கதாபாத்திரம் சுரபிக்கு என்கிறார்கள்.

அனிருத் படத்துக்கு இசையமைத்துள்ளார்.


Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil