Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு, த்ரிஷா

Webdunia
வியாழன், 6 மார்ச் 2014 (14:26 IST)
செல்வராகவன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு, த்ரிஷா நடிக்கின்றனர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் வெற்றி ஜோ‌டி என்பதால் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே செல்வராகவனின் படம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
FILE

இரண்டாம் உலகம் தோல்வி காரணமாக தனது பரீட்சார்ந்த முயற்சிகளை மூட்டைகட்டி தனது வழக்கமான பாணியில் படங்களை இயக்குவது என்று முடிவு செய்துள்ளார் செல்வராகவன்.

ஹீரோ சிம்பு. ஹீரோயின் யார் என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. தற்போது த்ரிஷாவின் பெயர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
FILE

விண்ணைத்தாண்டி வருவாயா படம் சிம்பு, த்ரிஷா ஜோ‌டியை காவிய ஜோ‌டியாக்கியது. அவர்கள் மீண்டும் செல்வராகவனின் படத்தில் ஒன்றிணைவதால் படம் குறித்த எதிர்பார்ப்பு கூடியுள்ளது. மேலும், இந்தப் படத்துக்கு யுவன் இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

FILE
புதுப்பேட்டை படத்துக்குப் பிறகு செல்வராகவன், யுவன் மத்தியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக யுவன் செல்வராகவன் பிரிந்தனர். ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன படங்களுக்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்தார். இரண்டாம் உலகத்தின் பாடல்கள் ஹ nரிஸ், பின்னணி இசை அனிருத்.

செல்வராகவன், யுவன் ஒன்றிணைவதும் இந்தப் புதிய படத்தை முக்கியமாக்குகிறது. ரேடியன்ஸ் மீடியா படத்தை தயாரிக்கிறது.

ஏப்ரலில் படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments