Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கொடைக்கானலில் இடம் பொருள் ஏவல்

கொடைக்கானலில் இடம் பொருள் ஏவல்
, வியாழன், 6 மார்ச் 2014 (11:29 IST)
சீனு ராமசாமி தனது இடம் பொருள் ஏவல் படத்தின் முதல் ஷெட்யூல்டை கொடைக்கானலில் தொடங்கியுள்ளார்.
FILE

நீர்ப்பறவைக்குப் பிறகு சீனு ராமசாமி இயக்கும் படம் இடம் பொருள் ஏவல். தென்மேற்குப் பருவக்காற்றில் அவர் நாயகனாக அறிமுகப்படுத்திய விஜய் சேதுபதியும், நீர்ப்பறவையில் நடித்த விஷ்ணுவும் இந்தப் படத்தில் நடிக்கிறார்கள். விஜய் சேதுபதி ஜோடியாக மனிஷாயாதவ். விஷ்ணு ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

இதன் முதல் ஷெட்யூல்டை கொடைக்கானலில் ஆரம்பித்துள்ளனர். விஜய் சேதுபதி, மனிஷயாதவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது படமாக்கப்படுகின்றன. படத்துக்கு யுவன் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார்.

இவர்கள் இணைவது இதுவே முதல்முறை.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil