கரணின் ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமான மகேஷ் பட்டின் மகள் ஹைவேயில் அனைவரையும் கவர்ந்தார். ஆனால் படம் ரொம்ப சுமார். அடுத்து இவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 2 ஸ்டேட்ஸ்.
பஞ்சாபி இளைஞனுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறவை மையப்படுத்திய கதை. சேத்தன் பகத்தின் நாவலைதான் அதே பெயரில் படமாக்கியுள்ளனர்.
இந்தப் படத்தில் தமிழ்ப் பெண்ணாக அலியா பட் நடித்துள்ளார். படத்தில் இவரின் கேரக்டர் பெயர் அனைனா சுவாமிநாதன். மாடர்ன் பெண்ணாக சென்னை எக்ஸ்பிரஸில் வரும் தீபிகா படுகோனின் கேரக்டருக்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என அலியா பட் கூறியுள்ளார்.
இந்திப் படங்களின் ஹீரோ, ஹீரோயினை தமிழர்களாக காண்பிக்கும் போக்கு சமீபமாக அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.