Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திப் படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடிக்கும் அலியா பட்

இந்திப் படத்தில் தமிழ்ப் பெண்ணாக நடிக்கும் அலியா பட்
, புதன், 5 மார்ச் 2014 (16:57 IST)
ஹைவே படத்தின் அனைத்து அம்சங்களையும் விமர்சகர்கள் கிழித்து தொங்கப் போட்டிருக்கிறார்கள். அவர்கள் பாராட்டிய இரு விஷயங்கள் ரஹ்மானின் இசையும், அலியா பட்டின் அழகும்.
FILE

கரணின் ஸ்டுடண்ட் ஆஃப் தி இயர் படத்தில் அறிமுகமான மகேஷ் பட்டின் மகள் ஹைவேயில் அனைவரையும் கவர்ந்தார். ஆனால் படம் ரொம்ப சுமார். அடுத்து இவரது நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 2 ஸ்டேட்ஸ்.

பஞ்சாபி இளைஞனுக்கும் தமிழ்ப் பெண்ணுக்கும் இடையில் ஏற்படும் உறவை மையப்படுத்திய கதை. சேத்தன் பகத்தின் நாவலைதான் அதே பெயரில் படமாக்கியுள்ளனர்.
webdunia
FILE

இந்தப் படத்தில் தமிழ்ப் பெண்ணாக அலியா பட் நடித்துள்ளார். படத்தில் இவரின் கேரக்டர் பெயர் அனைனா சுவாமிநாதன். மாடர்ன் பெண்ணாக சென்னை எக்ஸ்பிரஸில் வரும் தீபிகா படுகோனின் கேரக்டருக்கு முற்றிலும் வித்தியாசமாக இருக்கும் என அலியா பட் கூறியுள்ளார்.

இந்திப் படங்களின் ஹீரோ, ஹீரோயினை தமிழர்களாக காண்பிக்கும் போக்கு சமீபமாக அதிகரித்திருப்பது கவனத்துக்குரியது.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil