Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரி விலக்கு - சாதித்தார் உதயநிதி

Webdunia
திங்கள், 3 மார்ச் 2014 (10:27 IST)
இத்துன ு nண்டு அங்குசத்தை வைத்து அவ்ளோ பெரிய யானையை ஆட்டுவிக்கிற மாதிரி, தமிழ் கலாசாரத்தை படங்கள் பிரதிபலிக்கணும் என்ற சொத்தை விதிமுறையை வைத்து வேண்டாதவர்களின் படங்களுக்கு தண்ணி காட்டியது தமிழக அரசு நியமித்த வரிவிலக்கு பரிந்துரைக்குழு. அதன் ஆட்டத்துக்கு வரம்பு கட்டியிருக்கிறார் உதயநிதி.
FILE

ரெட்ஜெயண்ட் தயாரிப்பு என்றால் வரி விலக்கு பரிந்துரைக்குழு அதற்கு மேல் எதையும் பார்ப்பதில்லை. வரி விலக்கு சம்பந்தப்பட்ட படத்துக்கு கிடைக்காது. ஒரு கல் ஒரு கண்ணாடி, நீர்ப்பறவை, இது கதிர்வேலனின் காதல் என்று எதற்கும் வரி விலக்கு இல்லை.

பேட்டிகளில் முஷ்டி மடக்கி வந்த உதயநிதி நீதிமன்றத்துக்குப் போனார். ஒரு கல் ஒரு கண்ணாடி வெளிவந்த போதுதான் தனுஷின் 3 படமும் வெளியானது. 3 படத்துக்கு வரிவிலக்கு கிடைத்தது, உதயநிதி படத்துக்கு கிடைக்கவில்லை. காரணம் உதயநிதியின் படம் கலாசாரத்தை பிரதிபலிக்கவில்லை.
FILE

3 படத்தில் பாரில் வைத்து தாலி கட்டுகிறார்கள். அது என்ன மாதிரி கலாசாரம்? எங்கப் படத்தில் அதைவிட மோசமான காட்சி ஏதாவது இருக்கிறதா? உதயநிதி சார்பாக ஆஜரான வழக்குரைஞரின் கேள்வியில் நியாயம் இருந்ததால் உதயநிதியின் இரு படங்களுக்கும் வரி விலக்கு சான்றிதழ் தரப்பட்டுள்ளதாம்.

எப்படியோ... சொன்னபடி சாதித்து காட்டிவிட்டார் உதயநிதி.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments