Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தெலுங்கிலும் குமுதா ஹேப்பிண்ணே

தெலுங்கிலும் குமுதா ஹேப்பிண்ணே
, வெள்ளி, 21 பிப்ரவரி 2014 (13:08 IST)
குமுதா ஹேப்பிண்ணே என்று ஒரே டயலாக்கை வைத்து குமுதாவையும் அவர் பேமிலியையும் டார்ச்சர் செய்த பாலகுமாரர் தெலுங்குக்கு விஜயம் செய்கிறார். அதாவது, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.
FILE

விஜய் சேதுபதிக்கு ஆந்திராவில் அவ்வளவாக ரசிகர்கள் இல்லை. ஆந்திராவில் அவர் அப் கமிங் ஆக்டர்.

ஆனால் சுவாதிக்கு செம க்ரேஸ். சுப்பிரமணியபுரம் சுவாதிதான். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவில் அவர் இருப்பதால் அவரது பெயரை முன்னிறுத்தி ஆந்திராவில் வியாபாரம் பண்ணலாம் என சிலருக்கு நம்பிக்கை. ரசிகர்களுக்குப் பிடிக்கிற சரக்கும் படத்திலிருக்கிறது.
webdunia
FILE

மார்ச் நான்காம் தேதி ஹைதராபாத்தில் தெலுங்குப் பதிப்பின் பாடல்களை வெளியிடுகிறார்கள். மார்ச்சிலேயே பட வெளியீடு.

தெலுங்குப் படத்துக்கு இதேபெயரைதான் (தெலுங்கில்) வைத்திருக்கிறார்கள். ஆனால் பாலகுமாராவுக்குப் பதில் பாலகிருஷ்ணா. இதேக ஆசப்பட்டாவ் பாலகிருஷ்ணா. (உச்சரிப்பு சரிதானே?)

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil