Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலுமகேந்திராவின் உடலைப் பார்க்க நடிகை மவுனிகாவுக்கு எதிர்ப்பு

பாலுமகேந்திராவின் உடலைப் பார்க்க நடிகை மவுனிகாவுக்கு எதிர்ப்பு
, வெள்ளி, 14 பிப்ரவரி 2014 (10:50 IST)
பாலுமகேந்திராவின் மரண செய்தியைக் கேட்டு அவரது உடலைப் பார்க்க வந்த நடிகை மவுனிகாவுக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
FILE

மவுனிகா பாலுமகேந்திராவால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர். மவுனிகாவுடன் பாலுமகேந்திரா கொண்டிருந்த உறவு சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு 2008 ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்தனர். இந்த விவகாரத்தில் இயக்குனர் பாலாவுக்கும், பாலுமகேந்திராவுக்கும் நடுவே கருத்து மோதல்கள் எழுந்தன.

பாலுமகேந்திரா இறந்த தகவலை அறிந்ததும் அவரது உடலைப் பார்க்க மருத்துவமனைக்கு வந்தார் மவுனிகா. ஆனால் சிலர் அவரை அதற்கு அனுமதிக்கவில்லை. எல்லா இரண்டாவது மனைவிகளுக்கும் ஏற்படும் நிலைதான் இது என்று அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil