ரெட் ஜெயண்ட் வெளியிடும் நெடுஞ்சாலை
, திங்கள், 10 பிப்ரவரி 2014 (15:27 IST)
நெடும்பயணத்தை சந்தித்த கிருஷ்ணாவின் நெடுஞ்சாலை அடுத்த மாதம் 28 ஆம் தேதி வெளியாகிறது. சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா தனது திறமை முழுவதையும் கொட்டி எடுத்திருக்கும் படம் நெடுஞ்சாலை.
ஆரி நடித்திருக்கும் இப்படம் சரியான வியாபாரம் அமையாததால் திரைக்கு வருவதில் சிக்கல் நீடித்து வந்தது. படத்தை திரையிட சரியான நபரை தேடி அலைந்ததின் ஒருபகுதியாக நெடுஞ்சாலை உதயநிதி ஸ்டாலினுக்கும் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்தவர் அசந்துபோய் படத்தின் விநியோக உரிமையை வாங்கினார். அடுத்த மாதம் 28 ஆம் தேதி படத்தை வெளியிடுவது எனவும் முடிவு செய்துள்ளனர்.சாலைகளில் வசிக்கும் எளிய மனிதர்களைப் பற்றிய கதையிது. படத்தின் போஸ்டர்கள் அசப்பில் பருத்திவீரனைப் போலிருப்பதால் படத்துக்கு ஒரு எதிர்பார்ப்பு நிலவுகிறது.