Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோயிலுக்கு போவதும் ஹாட் நியூஸா? அலுத்துக்கொண்ட காஜல்

Webdunia
செவ்வாய், 4 பிப்ரவரி 2014 (13:00 IST)
நடிகைவீட்டு நாய் செத்துப் போனாலே நாலுகாலத்தில் செய்தி போடுகிறவர்கள் நாம். நடிகை கோயிலுக்கு போனதை மட்டும் போகஸ் செய்யாமல் விடுவோமா. அதுவும் காளஹஸ்தி கோயிலுக்கு?
FILE

காளஹஸ்தி கோயிலுக்கு மட்டும் தோஷம் தீர்க்கிற கோயில் என்ற பெயர் ஒட்டிவிட்டது. சும்மா தரிசனத்துக்கு போனாலும் தோஷம் கழிக்கவா வந்தீங்க என்று கேட்பது சகஜம். காஜல் அகர்வால் நடிகை. காளஹஸ்தி வந்தால் காலும் வாலும் பொருத்தி எழுதத்தான் செய்வார்கள்.

தனது தாய், தந்தையுடன் சமீபத்தில் காளஹஸ்தி கோயிலில் சாமி கும்பிட்டார் காஜல். அதனைத் தொடர்ந்து பல புரளிகள். படங்கள் இல்லை, தோஷம் கழிக்க வந்தார் என்று சிலர். திருமணத்துக்கு தடை அதுதான் இந்த தரிசனம் என வேறு சிலர். கடைசியில் காஜலிடமே கேட்டுவிட்டனர்.

கோயிலுக்கு எல்லோரும் எதுக்கு வருவாங்க? குடும்பம் நல்லாயிருக்கணும், தொழில் நல்லபடியா நடக்கணும்னு வேண்டிக்கத்தானே? நானும் அதுக்குத்தான் வந்தேன். அதைப்போய் வேற விதமா எழுதுறாங்களே என்று அலுத்துக் கொண்டார்.

தமிழில் படங்கள் இல்லாத காஜல் அகர்வால் விரைவில் முன்னணி நடிகர் ஒருவருடன் நடிக்கயிருக்கிறார். தற்போது விஷயம் பேச்சுவார்த்தையில் இருப்பதால் அவர் யார் என்ற கேள்விக்கு காஜலின் பதில்,

நேரம் வரும்போது தெரிவிக்கிறேன்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

Show comments