Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கழற்றிவிட்ட காட்ஃபாதர்

கழற்றிவிட்ட காட்ஃபாதர்
, செவ்வாய், 4 பிப்ரவரி 2014 (11:00 IST)
கழற்றிவிட்ட காட்ஃபாதர்... சொல்றதுக்கு சுகமா இருப்பதால் இப்படி எழுதினாலும் உண்மை அது இல்லை.
FILE

சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியதும், தொடர்ந்து வாய்ப்புகள் தந்து முன்னணி காமெடியனாக நிலைநிறுத்தியதும் சிம்பு. அவரது படங்களில் எது இருக்கிறதோ இல்லையோ சந்தானம் நிச்சயம் இருப்பார். கதையை, பெயரை தேர்வு செய்வதற்கு முன் சிம்பு சந்தானத்தை தனது படத்தில் தேர்வு செய்திருப்பார்.

தடங்கல்கள் இல்லாத பயணம் ஏது? முதல்முறையாக சிம்புவையும் மீறி சந்தானத்துக்குப் பதில் சூரியை ஒப்பந்தம் செய்திருக்கிறார் பாண்டிராஜ். இவரது படங்களில் சூரிக்குதான் இடம். சிம்பு, நயன்தாரா நடிக்கும் இது நம்ம ஆளு படத்துக்கும் சூரியை மனதில் வைத்தே அவரது கதாபாத்திரத்தை உருவாக்கினார். ஆனால் சிம்பு சூரியை ஒத்துக் கொள்ளவில்லை. சந்தானம்தான் அவரின் சாய்ஸ்.

இந்த கருத்து வேறுபாடு குறித்து பாண்டிராஜ் தெரிவித்தார். சூரியை சிம்பு முதலில் ஒத்துக் கொள்ளவில்லை. இந்த கதாபாத்திரத்தை சூரியை மனதில் வைத்தே எழுதினேன், சூரியுடனான காம்பினேஷன் ஹிட்டாகும் என்று எடுத்துச் சொன்ன பிறகே சம்மதித்தார்.

சிம்பு படத்தில் நடிக்காததில் சந்தானத்துக்கும் வருத்தம். சிம்பு படத்தில் நான் இல்லை என்ற போது வருத்தமாகதான் இருந்தது. ஆனா நீண்ட நாள்களுக்குப் பிறகு சிம்புவும், நயன்தாராவும் இணைஞ்சிருக்காங்களே... எனக்கு அது போதும் என்றிருக்கிறார்.

இதே பிரச்சனை இது கதிர்வேலன் காதல் படத்திலும் ஏற்பட்டது. இயக்குனர் பிரபாகரனின் சாய்ஸ் சூரி. உதயநிதியின் விருப்பம் சந்தானம். கடைசியில் ஒருவருக்கு முதல் பாதி இன்னொருவருக்கு இரண்டாம் பாதி என்று பிரித்து இருவரையுமே நடிக்க வைத்தனர்.

இந்த பிஃப்டி பிஃப்டியை பாண்டிராஜும், சிம்புவும் முயன்றிருக்கலாமே.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil