Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நானும் இப்போ தயாரிப்பாளர்

நானும் இப்போ தயாரிப்பாளர்
, திங்கள், 3 பிப்ரவரி 2014 (14:52 IST)
FILE
இந்த தலைமுறைக்கு மனோபாலாவை காமெடி நடிகராகதான் தெரியும். ரஜினிகாந்தையே இயக்கியிருக்கிறார் என்பது தெரியாது. இப்போது ஒரு படத்தையும் தயாரிக்கிறார்.

மனோபாலா ஸ்ரீதரின் காதலிக்க நேரமில்லை படத்தின் ரிமேக் ரைட்ஸை வாங்கி வைத்துள்ளார். பலமுறை இந்தப் படத்தை ரிமேக் செய்ய அவர் முயன்றதும் உண்டு. ஆனால் இதுவரை முயற்சி திருவினையாகவில்லை. ஒரே லாபம், இந்த ரிமேக் குறித்து பரவிய கதைகள்.

காதலிக்க நேரமில்லையை அவ்வளவு எளிதில் ரிமேக் செய்ய முடியாது. நாகேஷ் கேரக்டருக்குக்கூட வடிவேலுவை வைத்து ஒப்பேற்றிவிடலாம். ஆனால் பாலையாவின் கேரக்டருக்கு? இதே கேள்வியை ஸ்ரீதரும் மனோபாலாவிடம் கேட்டிருக்கிறார்.

சரி, மேட்டருக்கு வருவோம்....

webdunia
FILE
மனோபாலா தயாரித்தால் அது காதலிக்க நேரமில்லையின் ரிமேக்காகதான் இருக்கும் என்ற நிலையில் சதுரங்க வேட்டை என்ற புதிய படத்தை தயாரிக்கிறார். நட்டு என்கிற நடராஜ் நடிக்கிற இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகிறார்.

தயாரிப்பு என்பது பெரிய நிறுவனங்களுக்கே சூதாட்டமாக மாறிவிட்ட நிலையில் மனோபாலாவின் இந்த தயாரிப்பு முயற்சிக்கு ஒரே பெயர்தான் தர முடியும்.

ஓவர் கான்பிடென்ட்.

Share this Story:

Follow Webdunia tamil