வெற்றிமாறன் ஐ.பி.எஸ். - தமிழனை துரத்தும் துரதிர்ஷ்டம்
, சனி, 25 ஜனவரி 2014 (16:28 IST)
மோகன்லாலின் த்ரிஷ்யம் கேரள பாக்ஸ் ஆபிஸ் சரித்திரத்தையே மாற்றி எழுதியிருக்கிறது. பாலசந்தர் லால் போன்ற நடிகர்கள் உலகத்திலேயே மூணு நாலு பேர்தான் இருப்பார்கள் என பாராட்டுகிறார். இப்படியொரு சூழலில் திருஷ்டிப் பொட்டாக வந்தது ஜில்லா.
நமக்குதான் அது திருஷ்டிப் பொட்டு. லாலுக்கு கோடிகளில் லாபம் சம்பாதித்து தந்தது. அந்த துரதிர்ஷ்டம் மேலும் தொடரயிருப்பதுதான் விஷயமே.2012
ல் மோகன்லால் நடித்த ஐந்து மலையாளப் படங்களில் ஒன்று கர்மயோதா. ஐந்தில் இந்தப் படம்தான் அட்டர் ப்ளாப். மேஜர் ரவி இயக்கிய இந்த அட்டர் ப்ளாப்பை வெற்றிமாறன் ஐ.பி.எஸ். என்ற பெயரில் தமிழில் வெளியிடுகிறார்கள்.