Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் இளையராஜா இசையில் பாலா படம்

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2014 (12:00 IST)
FILE
தனது அடுத்தப் படத்துக்கு மீண்டும் இளையராஜாவை நாடியிருக்கிறார் பாலா.

சேது, பிதாமகன், நான் கடவுள் ஆகிய பாலாவின் படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். நந்தாவும், அவன் இவனும் யுவன் ஷங்கர் ராஜா. கடைசிப் படம் பரதேசி ஜி.வி.பிரகாஷ்.

பரதேசிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷையே பாலா வைத்துக் கொள்வார் என பலமான நம்பிக்கை கோடம்பாக்கத்தில் வீசியது. மாறாக மீண்டும் இளையராஜாவிடம் பாலா திரும்பியிருக்கிறார்.

பாலா அடுத்து கரகாட்டத்தை மையப்படுத்திய படத்தை எடுக்கிறார். சசிகுமார் முக்கிய வேடத்தில் நடிப்பார் என தெரிகிறது. கிராமிய இசை தேவைப்படும் இந்தப் படத்துக்கு இளையராஜாவே சரியான சாய் ஸ hக இருப்பார் என மீண்டும் அவரை தேடிப் போயிருக்கிறார் பாலா.

விரைவில் படம் குறித்த முறையான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களுக்கு லேப்டாப் இல்லை: ஈபிஎஸ் கண்டனம்..!

பிரபல தமிழ் நடிகைக்கு 3வது திருமணம்.. வைரல் புகைப்படம்..!

நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘பார்க்கிங்’ திரைப்படம் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்ஸ் லைப்ரரியில் இடம்பெற்றுள்ளது!

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

Show comments