சமந்தா நாக சைதன்யா ஜோடியாக ஆட்டோ நகர் சூர்யா என்ற படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் ஒரு முத்தக் காட்சி. இயக்குனர் முத்தம் பற்றி சொன்னதும், அதெல்லாம் முடியாது என்று வாயை இறுக மூடிக் கொண்டிருக்கிறார். இயக்குனர், நாக சைதன்யா இருவருக்குமே ஆச்சரியம்.
சமந்தாவின் முதல் தெலுங்குப் படம் யே மாயா சேசாவே. ஜோடி நாக சைதன்யா. அறிமுகமான முதல் படத்தில் நாக சைதன்யாவுடன் முத்தக் காட்சியில் சமந்தா எந்த எதிர்ப்புமின்றி நடித்தார். இப்போதும் அதே நாக சைதன்யாதான். ஆனால் முத்தத்துக்கு கண்டிப்பாக நோ சொல்லிவிட்டார்.
சித்தார்த்துடனான சமந்தாவின் காதல்தான் முத்தத்துக்கு நோ சொல்ல வைத்தது என்பது ஆந்திராவின் அபிப்ராயம். சமந்தா செய்தது சரிதானே.