Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அது யார் அலியா பட்...?

அது யார் அலியா பட்...?
, புதன், 22 ஜனவரி 2014 (19:30 IST)
FILE
வெற்றிமாறன் தனுஷை இயக்குகிறார் என்று கடந்த ஒரு வருடமாக கூறிக் கொண்டிருக்கிறது மீடியா. வெற்றிமாறனும் ச‌ரி, தனுஷும் ச‌ரி அது பற்றி கவலைப்பட்டதாக தெ‌ரியவில்லை. வெற்றிமாறன் புதியவர்களிடம் கதை கேட்பதிலும், படம் தயா‌‌ரிப்பதிலும் பிஸி.

அவ்வப்போது வெற்றிமாறனின் மூன்றாவது படம் குறித்து தகவல் வரும். இப்படி வந்த தகவல்களை தொகுத்தால் அதிகபட்சம் மூன்று வ‌ரிகள் வரும். வெற்றிமாறன் தனது மூன்றாவது படத்திலும் தனுஷை இயக்குகிறார். இசை ‌ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு வேல்ரா‌ஜ் என்று அதே பழைய டீம். ஹீரோயினாக மனிஷா யாதவ் நடிக்கக் கூடும். காடுகளில் இதன் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளார். வேங்கைச்சாமி என்பது படத்தின் பெயர்.

இந்த மூன்றுவ‌ரி தகவல்களில் ஒன்றைக்கூட இதுவரை வெற்றிமாறன் தனது வாயால் உறுதி செய்யவில்லை. இப்படியொரு சூழலில்தான் அந்த செய்தியை சிலர் வெளியிட்டார்கள். வெற்றிமாறனின் படத்தில் அலியா பட் நடிக்கிறார்.

எத்தனையோ ஷாக்கிங் செய்திகளுக்கு மௌனமாக இருந்தவரால் இதற்கு அப்படி இருக்க முடியவில்லை. யார்ரா அந்த அலியா பட், எனக்கு ஆளை தெ‌ரியாதே என்று அந்த செய்திக்கு ‌‌ரியாக்சன் காட்டியிருக்கிறார்.

தப்பா செய்தி போட்டால்தான் சிலர் பதிலே சொல்வார்கள் போலிருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil