Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

'இ‌‌ந்த‌ப் பெ‌ண் எ‌ன்னை மா‌ற்‌றி‌வி‌ட்டா‌ள்' - ஃபக‌த் பா‌சி‌ல்

'இ‌‌ந்த‌ப் பெ‌ண் எ‌ன்னை மா‌ற்‌றி‌வி‌ட்டா‌ள்' - ஃபக‌த் பா‌சி‌ல்
, திங்கள், 20 ஜனவரி 2014 (19:59 IST)
ஃபகத் ஃபாசில் விரைவில் நஸ்‌ரியா நசீமை திருமணம் செய்யப் போகிறார். இதுதான் இப்போதைய ஹாட் டாபிக்.
FILE

ஃபகத் ஃபாசில் இயக்குனர் ஃபாசிலின் மகன். அவரால் ஹீரோவாக மலையாளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர். முதல் படம் அட்டர் ப்ளாப்பாக சினிமாவிலிருந்து முற்றிலுமாக தன்னை துண்டித்துக் கொண்டார். ஏழு வருட வனவாசத்துக்குப் பிறகு முன் வழுக்கையுடன் சினிமாவில் ‌ரீஎன்ட்‌ரியானவர் இப்போது மலையாளத்தின் முன் வ‌ரிசை ஹீரோக்களில் ஒருவர். சென்ற வருடம் மட்டும் இவர் நடிப்பில் 12 படங்கள் வெளியாயின. அதில் பாதிக்கு மேல் ஹிட். அன்னாயும் ரசூலும், ஆர்டிஸ்ட் போன்ற அருமையான படங்கள் இதில் அடக்கம்.

webdunia
FILE

சென்ற வருடம் ஃபகத்தின் அன்னாயும் ரசூலும் ஜனவ‌ரி 04 வெளியானது. அதில் ஃபகத்துக்கு ஜோடி ஆண்ட்‌ரியா. படம் வெளியான பிறகு ஆண்ட்‌ரியாவை காதலிப்பதாக ஃபகத் தெ‌ரிவித்தார். உடன் நடித்த போது அப்படி ஒன்றும் தெ‌ரியவில்லை எனவும், டப்பிங் பேசும்போது ஆண்ட்‌ரியாவை தான் காதலிப்பதை உணர்ந்ததாகவும் அவர் தெ‌ரிவித்தார். ஆனால் இந்தக் காதலை ஆண்ட்‌ரியா ஏற்றுக் கொள்ளவில்லை.

இப்படியொரு சூழலில் ஃபகத்தின் முதல் காதல்(?) ஒருதலையாக முடிந்த நிலையில் நஸ்‌ரியாவும், ஃபகத்தும் காதலிப்பதாகவும், திருமணம் செய்யவிருப்பதாகவும் தகவல் வந்தால்...?

ச‌ரிதான் போங்கப்பா. இந்த மீடியாக்காரர்களுக்கு வேற வேலை இல்லை என்றுதான் நினைக்க தோன்றும். ஆனால் ஃபகத் ஃபாசிலே தனது காதலையும், திருமணத்தையும் தனது முகநூலில் தெ‌ரிவித்திருக்கிறார். இருவரும் திருமணம் செய்வதை அதில் அவர் உறுதி செய்திருக்கிறார். அவர் முகநூலில் தெ‌ரிவித்திருப்பது பின்வருமாறு.

ஹலோ, நான் இப்போதுதான் கண் விழித்தேன், ஷூட்டிங் தாமதம். ஆம்! நஸ்ரியாவுடன் எனக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. என்னைக் கல்யாணம் செய்துகொள்வது ஒரு பெண் அவளது வாழக்கையில் எடுக்கும் மிகப்பெரிய ரிஸ்க், மற்றும் தியாகமே. இப்படிப்பட்டப் பெண்ணை நான் கடைசியாக சந்தித்தே விட்டேன். என் குடும்பத்தினருக்கு நஸ்ரியாவை மிகவும் பிடிக்கும். இதனால் நானும் நஸ்ரியா மீது காதலில் விழுந்தேன்.
webdunia
FILE

நான் இங்கு ஒரு பெரிய அடுத்த அடியை எடுத்து வைக்கிறேன் நண்பர்களே, எனக்கே ஆச்சரியமளிக்கும் விதமாக நான் சம்பிரதாய முறையில் திருமணம் நடத்த ஒப்புக்கொண்டுள்ளேன். இந்தப் பெண் என்னை மாற்றிவிட்டாள். அவள் ஒரு மேஜிக். எனது திருமணத்திற்கு நீங்கள் பகிர்ந்து கொண்ட ஆதரவினால் நெகிழ்ச்சியடைந்துள்ளேன். நான் நஸ்ரியாவுடன் கடைசி வரை, மரணம் வரையிலும் ஏன் அதற்கு அப்பாலும் சீரும், சிறப்பும், பொறுப்புமாக வாழ்வேன்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil