Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் வைத்த பார்ட்டி - மோகன்லால் கலந்து கொண்டார்

விஜய் வைத்த பார்ட்டி - மோகன்லால் கலந்து கொண்டார்
, திங்கள், 20 ஜனவரி 2014 (11:42 IST)
ஜில்லா படத்தின் வெற்றியை பார்ட்டி வைத்து கொண்டாடினார் விஜய். இந்த பார்ட்டியில் மோகன்லாலுடன், பாக்யராஜும் கலந்து கொண்டார்.
FILE

நானும் ரவுடிதான் ரேஞ்சில், எங்க படமும் வெற்றிதான் என்பதை உலகுக்கு காட்ட குஞ்சு குளுவான்களும் சக்சஸ் மீட், சக்சஸ் பார்ட்டி வைப்பது சகஜம். ஜில்லா பிரம்மாண்ட வெற்றி. ஒன்றிரண்டு பார்ட்டிகளாவது வைக்காமலிருந்தால் எப்படி.
webdunia
FILE

கடந்த வெள்ளிக்கிழமை ஒரு ஸ்பெஷல் பார்ட்டியை தனது வீட்டிலேயே ஒழுங்கு செய்தார் விஜய். இந்தப் பார்ட்டியில் படம் சம்பந்தப்பட்டவர்களுடன் பாக்யராஜும் கலந்து கொண்டார். இதற்காக ஸ்பெஷல் கேக் தருவிக்கப்பட்டிருந்தது. சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸுடா என்று அதில் எழுதப்பட்டிருந்தது என்பது கேக்கை சுவைத்தவர்கள் சொன்ன செய்தி.

மோகன்லாலும் குஷியுடன் இந்தப் பார்ட்டியில் கலந்து கொண்டார். கேரளாவில் கோடிகளை அள்ளிய மகிழ்ச்சி அவருக்கு. ஆக எல்லோரையும் இன்புற்றிருக்க வைத்திருக்கிறது ஜில்லா.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil