Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

3 -வது திருமணத்துக்கு தயாராகும் வனிதா விஜயகுமார்

3 -வது திருமணத்துக்கு தயாராகும் வனிதா விஜயகுமார்
, திங்கள், 20 ஜனவரி 2014 (11:27 IST)
விஜயகுமார் - மஞ்சுளா தம்பதியின் மகள் வனிதா விஜயகுமார் 3 வது திருமணத்துக்கு தயாராகிவிட்டார். இப்போதைக்கு நட்புடன் இருக்கிறோம். இன்னும் திருமணம் ஆகவில்லை. இருவீட்டாருக்கும் சம்மதம். திருமணம் ஆனதும் முறைப்படி அறிவிப்போம் என குழப்படியான ஸ்டேட்மெண்ட் ஒன்றை தந்திருக்கிறார்.
FILE

வனிதா என்றதும் முதல் கணவர் ஆகாஷுடன் அவர் நடத்திய மீடியா போர்தான் நினைவுக்கு வரும். தனது மகன் ஸ்ரீஹரிக்காக மீடியா முன்னால் புரண்டு சண்டை போட்டவர். இரண்டாவது கணவரையும் விவாகரத்து செய்து தற்போது டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் இல்வாழ்க்கையில் இணைகிறார்.

ராபர்ட் நடிகை அல்போன்சாவின் தம்பி. டான்ஸ் மாஸ்டராக இருக்கிறார். விஜய், சிம்பு போன்றவர்களின் படங்களில் நடனம் அமைத்துள்ளார். இவருக்கும் வனிதாவுக்குமான நட்பு இப்போது காதலாகி திருமணத்தில் கசிந்துருக இருக்கிறது. இரு வீட்டாருக்கும் இந்த புதிய நட்பில் எதிர்ப்பில்லை. விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என தெரிவித்துள்ளார்.
webdunia
FILE

வனிதாவுக்கு முதல் கணவர் ஆகாஷ் மூலமாக ஸ்ரீஹரி என்ற மகன் இருக்கிறான். இரண்டாவது கணவர் ஆனந்த்ராஜ் மூலமாக ஒரு மகள்.

விரைவில் ராபர்ட் ஒரு படம் இயக்குவதாகவும், அதை நான் தயாரிப்பேன் எனவும் வனிதா தெரிவித்தார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil