Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் சிம்பு, தனுஷ் படங்களின் ஆடியோ

ஒரே நாளில் சிம்பு, தனுஷ் படங்களின் ஆடியோ
, ஞாயிறு, 19 ஜனவரி 2014 (16:29 IST)
எதிரிகள் என்ற இமேஜ் மேடைகளில் கட்டிப் பிடித்து உடைத்தாலும், அதெல்லாம் சும்மா ஷோக்குக்கு என்றுதான் தமிழ்கூறும் நல்லுலகம் நம்பியது.
FILE

சமீபத்தில் சிம்புவும், தனுஷும் சேர்ந்து லண்டனில் விடுமுறையை கொண்டாடிய பிறகே, ஓகோ... ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ்தான் போல என்று சமாதானமடைந்தனர். இந்நிலையில் இருவரின் படங்களின் பாடல்கள் ஒரே நாளில் வெளியாகின்றன.

நிக்ஆர்ட்ஸ் தயாரிப்பில் வேட்டை மன்னன் படத்தில் நடித்த சிம்பு அதனை நிறுத்தி வைத்து செய்த சாகஸங்களை பட்டியலிட்டால் அது ஸ்பெஷல் அளவுக்கு வரும்.
webdunia
FILE

வேட்டை மன்னன் அண்டர் புரொடக்ஷனில் இருக்கும் போதே அதே நிக் ஆர்ட்ஸ் தயாரிப்பில் வாலு என்ற படத்தை அறிவித்து போட்டோசெஷன், டீஸர் என்று அதகளப்படுத்தினார். இந்த டீஸரில்தான் தனுஷுக்கு கவுண்டர் தரும் வகையில், சில பசங்களை பார்க்கப் பார்க்கதான் பிடிக்கும். உன்னை பார்த்த உடனே பிடிக்கும் என்று ஹன்சிகாவை வைத்து வசனம் பேச வைத்தார்.

அந்த வாலு படத்தின் பாடல்களை ஃபெப்ரவரி 14 காதலர் தினத்தில் சிம்பு வெளியிடுகிறார். வாலுக்கு இசையமைத்தவர் தமன். அதே நாளில்தான் தனுஷ் தயாரித்து நடித்து வரும் வேலையில்லா பட்டதாரி படத்தின் பாடல்களும் வெளியாகின்றன. இசை அனிருத்.
webdunia
FILE

சிம்பு தனது வாலு படத்தை மே 1 அஜித் பிறந்தநாள் அன்று வெளியிடுகிறார்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil